தங்கம் விலை கடந்த 2 நாட்களாகக் குறைந்தநிலையில் இன்று மாற்றமில்லாமல் இருக்கிறது.
தங்கம் விலை கடந்த 2 நாட்களாகக் குறைந்தநிலையில் இன்று மாற்றமில்லாமல் இருக்கிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று நீடித்தவாறு கிராம் ரூ.5,275ஆகவும், சவரன் ரூ.42 ஆயிரத்து 200ஆக இன்றும் நீடிக்கிறது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,275க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து 2நாட்களாகக் குறைந்தநிலையி்ல் இன்று விலை அதிகரிக்காமல் மாற்றமில்லாமல் இருப்பதே நடுத்தரக் குடும்பத்தினருக்கு நிம்மதியளிக்கும் விஷயமாகும். கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.120 சரிந்தநிலையில் இன்று மாற்றமில்லை.
தங்கம் விலை தொடர் சரிவு| சவரனுக்கு ரூ.120 குறைந்து:நிலவரம் என்ன
அமெரிக்க பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கில் வரும் மார்ச் மாதத்தில் பெடரல் ரிசர்வ் வட்டியை 50 புள்ளிகள் உயர்த்த இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அமெரிக்க கடன் பத்திரங்கள் விலை உயர்ந்துள்ளது. இ்ந்தியச்ச ந்தையிலிருந்தும் அந்நிய முதலீடு வெளியேறும் ஆபத்து உள்ளது.
அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பங்குப்பத்திரங்கள், கடன்பத்திரங்களில் திருப்பத் தொடங்கியதால், கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை படிப்படியாகக் குறைந்தது. ஆனால், வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாகவே சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
தங்கம் விலை அதிரடி உயர்வு| சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு: நிலவரம் என்ன?
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 71.70 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு 30பைசா அதிகரித்து, ரூ.72ஆகவும், கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து, கிலோ ரூ.72,000 ஆகவும் ஏற்றம் கண்டுள்ளது.