Stock Market Today: பங்குச்சந்தை| சென்செக்ஸ், நிப்டி மீண்டும் வீழ்ச்சி: என்ன காரணம்? ஆட்டோ பங்குகள் லாபம்!

Published : Feb 15, 2023, 09:53 AM ISTUpdated : Feb 15, 2023, 10:03 AM IST
Stock Market Today: பங்குச்சந்தை| சென்செக்ஸ், நிப்டி மீண்டும் வீழ்ச்சி: என்ன காரணம்? ஆட்டோ பங்குகள் லாபம்!

சுருக்கம்

Stock Market Today: இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று உயர்ந்தநிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.

Stock Market Today: இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று உயர்ந்தநிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.

அமெரிக்காவின் ஜனவரி மாத சில்லறைப் பணவீக்க விவரங்கள் நேற்று வெளியாகின. இதில் சில்லறைப் பணவீக்கம் 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது, எதிர்பார்த்த அளவு குறையவில்லை. இதனால் அடுத்துவரும் நிதிக்குழுக் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் கடனுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

பங்குச்சந்தை| சென்செக்ஸ் 61,000 புள்ளிகளை எட்டியது! நிப்டி ஏற்றம்: ஐடி பங்குகள் லாபம்

இதனால் சுதாரித்த முதலீட்டாளர்கள், பங்கு, கடன் பத்திரங்களில் முதலீட்டை அதிகப்படுத்தியுள்ளனர். இந்தியச் சந்தையிலிருந்தும் நேற்று முதல் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது அதிகரித்து, டாலரில் முதலீடு செய்வது உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் டாலர் மதிப்பு வலுப்பெறும், இந்திய ரூபாய் மதிப்பும் நெருக்கடிக்குள்ளாகும்.

இதனால் இன்று காலை முதல் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுடன் நகர்ந்து வருகிறது. இந்தியாவிலும் ஜனவரி பணவீக்கம் காரணமாக ஏப்ரலில்ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்த வேண்டிய நிலை இருப்பதால், முதலீட்டாளர்கள் முதலீட்டை கவனத்துடன் கையாள்கிறார்கள்.

காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 261 புள்ளிகள் குறைந்து, 60,770 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது, தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 70 புள்ளிகள் குறைந்து, 17,860 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது

பங்குச்சந்தை| சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு!, நிப்டி ஜோர்: ஐடி பங்கு லாபம்

அதானி குழுமத்தில் அதானி வில்மர், அதானி சிமெண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், அதானி என்டர்பிரைசர்ஸ் பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளது, மற்ற நிறுவனங்களின் பங்குகள் குறைந்துள்ளன.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில் 26 நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிந்துள்ளன, 4 நிறுவனங்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல் பங்குகள் மதிப்பு அதிகரித்துள்ளது.

நிப்டி துறைகளில் ஆட்டோமொபைல்,ஊடகம், உலோகம், மருந்துத்துறை, பொதுத்துறை, தனியார் வங்கி, ரியல் எஸ்டேட் துறைப் பங்குகள் ஓரளவுக்கு ஏற்றத்துடன் உள்ளன.

 

ஆர்பிஐ-க்கு நெருக்கடி! ஜனவரி சில்லறை பணவீக்கம் 6.52% அதிகரிப்பு: ரெப்போ வட்டி உயரலாம்?

நிப்டியில் அதானி என்டர்பிரைசர்ஸ், எய்ச்சர் மோட்டார்ஸ், கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் அதிக லாபத்துடன் செல்கின்றன. ஐடிசி, அப்பலோ மருத்துவமனை, எச்யுஎல், லார்சன் அன்ட் டூப்ரோ, விப்ரோ பங்குகள் மதிப்பு குறைந்துள்ளது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

UPI-யோடு கிரெடிட் கார்டா..! மெர்சல் காட்டிய கூகுள் பே..! இந்தியர்கள் செம குஷி!!
டிசம்பர் 31 கடைசி தேதி.. இந்த பணிகளை மறக்காதீங்க.. இல்லைனா அபராதம் விதிக்கப்படும்!