CPI Data: ஆர்பிஐ-க்கு நெருக்கடி! ஜனவரி சில்லறை பணவீக்கம் 6.52% அதிகரிப்பு: ரெப்போ வட்டி உயரலாம்?

By Pothy Raj  |  First Published Feb 14, 2023, 1:39 PM IST

2023, ஜனவரி மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.52 சதவீதமாக அதிகரித்துள்ளதால், வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டுள்ளது.


ஜனவரி மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.52 சதவீதமாக அதிகரித்துள்ளதால், வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ரிசர்வ் வங்கி தள்ளப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் பணவீக்க கட்டுப்பாட்டு அளவு என்பது 6 சதவீதம். ஆனால், கடந்த 10 மாதங்களாக பணவீக்கம் கட்டுப்பாட்டு அளவை மீறியதால், கடந்த மே மாதத்தில் இருந்து கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது. 

Tap to resize

Latest Videos

ஆதார்-பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 கெடு! எப்படி இணைப்பது தெரிந்து கொள்ளுங்கள்

இதற்கு ஓரளவு பலன் கிடைத்து கடந்த டிசம்பர், நவம்பர் மாதத்தில் பணவீக்கம் குறைந்தநிலையில் ஜனவரியில் மீண்டும் உயர்ந்துள்ளது. ஜனவரியில் பணவீக்கம் அதிகரித்தமைக்கு பருப்பு வகைகள், புரோட்டின் சத்து நிறைந்த பொருட்கள் விலை உயர்வு காரணமாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஜனவரி மாதத்தில் மொத்தவிலைப் பணவீக்கம் 4.73 சதவீதமாகக் குறைந்துள்ளது, 2022,டிசம்பரில் 4.95 சதவீதமாக இருந்ததுகுறிப்பிடத்தக்கது.

2022, டிசம்பரில் சில்லறை விலைப் பணவீக்கம் 5.72 சதவீதமாகக் குறைந்திருந்தது. 2022, ஜனவரியி்ல 6.01 சதவீதமாக இருந்தது, அதிகபட்சமாக அக்டோபரில் 6.77 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 5.94 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது 2022, டிசம்பரில் 4.19 சதவீதமாகக் குறைந்திருந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் 5.43 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக, 2023, ஜனவரியில் உணவுப்பொருட்களுக்கான பணவீக்கம் கடந்த ஆண்டு ஜனவரியைவிட  அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் கிராமங்களில் சில்லறைப் பணவீக்கம் 6.85 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 6 சதவீதமாகவும் இருந்தது. 

கணக்குத் தணிக்கைக்காக அமெரிக்காவின் கிராண்ட் தார்ன்டன் நிறுவனத்துடன் அதானி குழுமம் ஒப்பந்தம்

ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை பணவீக்கத்தை சராசரியாக 4 சதவீதமாக வைக்க வேண்டும், 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த, கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளது.
ஆனால், பணவீக்கம் கட்டுக்கடங்காமல் 8 சதவீதம் வரை சென்றதையடுத்து, கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது.

ரிசர்வ் வங்கி இதுவரை 2.50 சதவீதம் வட்டியை உயர்த்தியதால், 4 சதவீதமாக இருந்த வட்டி தற்போது 6.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தவட்டிவீத உயர்வால், மாத வருமானத்தில் வீட்டுக்கடன், வாகனக்கடன் பெற்று இஎம்ஐ செலுத்துவோர் நிலைமை பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது.

கடந்த வாரம் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் 25 புள்ளிகள் வட்டியில் உயர்த்தப்பட்டது. ஜனவரியில் பணவீக்கம் மீண்டும் 6 சதவீதத்தைக் கடந்துள்ளதால், வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்திலும் வட்டியை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆர்பிஐ தள்ளப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் நாட்டின் பணவீக்கம் சராசரியாக 6.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. 

‘டெட்டால் போட்டு வாயை கழுவுங்க’ – மக்களவையில் நிர்மலா சீதாராமன் காட்டம்

இனிவரும் நாட்களில் உணவுப் பொருட்கள் விலை குறைந்தால் மட்டும்தான் பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்படாமல் இருக்கவேண்டும். உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், சத்தான உணவு வகைகள் விலை உயரும் பட்சத்தில், 2023, பிப்ரவரியிலும் பணவீக்கம் அதிகரிக்கும். இதன் விளைவு, ஏப்ரலில் வட்டியை மேலும் ரிசர்வ் வங்கி உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகும்.

click me!