தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் விலை குறைந்துள்ளது. நகைப்பிரியர்கள், நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகைப்பிரியர்களுக்கும் இந்த விலைக் குறைவு பெரியஆறுதலை அளித்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் விலை குறைந்துள்ளது. நகைப்பிரியர்கள், நடுத்தரக் குடும்பத்தினருக்கும், நகைப்பிரியர்களுக்கும் இந்த விலைக் குறைவு பெரியஆறுதலை அளித்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,335ஆகவும், சவரன், ரூ.42,680ஆகவும் இருந்தது.
முதல்நாளே இன்ப அதிர்ச்சி! தங்கம் விலையால் நடுத்தரக் குடும்பங்கள் ஹேப்பி! இன்றைய நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்கிழமை) கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து ரூ.5,330ஆகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.42 ஆயிரத்து 640 எனச் சரிந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,330க்கு விற்கப்படுகிறது
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவது, நகைப்பிரியர்களுக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம்! நகை வாங்குபவர்கள் என்ன செய்ய?
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை அடுத்துவரும் கூட்டத்தில் உயர்த்தும் என்ற தகவலால் டாலர் வலுப்பெற்று வருகிறது, அந்நிய முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டைக் குறைத்து பங்குப்பத்திரங்களிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் தங்கத்தின் தேவை குறைந்து விலை குறையத் தொடங்கியுள்ளது.
அது மட்டுமல்லாமல் ஜனவரி மாத பணவீக்கம் எதிர்பார்ப்பை விட அதிகரித்துள்ளது. இதனால், ரிசர்வ் வங்கி வரும் ஏப்ரல் மாத நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டியை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்துக்கான தேவை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் தங்கத்தின் விலை படிப்படியாக்க குறைந்து வருகிறது.
வெள்ளி விலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.72.00 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு 50 பைசா ஏற்றம் கண்டு, ரூ.72.50 ஆகவும், கிலோ ரூ.72,000 ஆக இருந்தநிலையில், கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து, ரூ.72,500 ஆக உயர்ந்துள்ளது.