
இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த 2 வர்த்தக தினங்களாக சரிந்தநிலையில் இன்று உயர்ந்தன. சென்செக்ஸ் மீண்டும் 61ஆயிரம் புள்ளிகளை எட்டியது, நிப்டியும் ஏற்றம் கண்டது.
இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை முதலே ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. அமெரிக்காவின் நாஷ்டாக் பங்குச்சந்தை ஏற்றத்துடன் நேற்று முடிந்ததால் காலை முதல் ஐடி பங்குகளை ஆர்வத்துடன் முதலீட்டாளர்கள் வாங்கினர்.
இன்று இரவு அமெரிக்காவின் பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாக உள்ளன. இதை ஆர்வத்துடன் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதில் பணவீக்கம் குறையும் என்றே முதலீட்டாளர் நம்புவதால், பங்குச்சந்தையில் காலை முதலே வர்த்தகம் ஏற்றத்துடன் இருந்தது.
ஆதார்-பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 கெடு! எப்படி இணைப்பது தெரிந்து கொள்ளுங்கள்
இருப்பினும் இந்தியாவில் ஜனவரி மாத பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவைவிட அதிகரித்து 6.52 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், வரும் ஏப்ரல் மாதத்தில் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
ஆனால், ஜனவரி மாத மொத்தவிலைப் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவில் 4.50சதவீதமாக குறைந்தது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலை அளித்தது. ஐடி பங்குகள் உயர்வு, அதானி என்டர்பிரைசர்ஸ் உள்ளிட்டபல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளால், சந்தையில் ஏற்றம் தொடர்ந்தது.
மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 61,032 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 158 புள்ளிகள் அதிகரித்து, 17,929 புள்ளிகளில் நிலைபெற்றது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில், 11 நிறுவனங்களின் பங்குகள் சரிவிலும், மற்ற 19 நிறுவனங்களின் பங்குகள் லாபத்திலும் உள்ளன.
எச்யுஎல், டாடா மோட்டார்ஸ், கோடக்மகிந்திரா, டைட்டன், பவர்கிரிட், மாருதி, ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, என்டிபிசி பங்குகள் விலை குறைந்தன.
கணக்குத் தணிக்கைக்காக அமெரிக்காவின் கிராண்ட் தார்ன்டன் நிறுவனத்துடன் அதானி குழுமம் ஒப்பந்தம்
நிப்டியில் யுபிஎல், ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ், அதானி என்டர்பிரைசர்ஸ் பங்குகள் அதிக லாபமடைந்தன. எய்ச்சர் மோட்டார்ஸ், அப்பலோ மருத்துவமனை, எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், பிபிசிஎல் பங்குகள் விலை குறைந்தன
. நிப்டி துறைகளில் எரிசக்தி, கட்டுமானத்துறைப் பங்குகள் ஒரு சதவீதம் சரிந்தன, ஐடி, எப்எம்சிஜி, உலோகத்துறை பங்குகள் ஒரு சதவீதம் உயர்ந்தன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.