Share Market Today: பங்குச்சந்தையில் Adani எஃபெக்ட்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் விர்! நிப்டி ஜோர்: காரணம் என்ன?

By Pothy RajFirst Published Mar 3, 2023, 4:01 PM IST
Highlights

இந்தியப் பங்குசந்தைகள் இன்று உற்சாகத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 1000 புள்ளிகள் வரை உயர்ந்து, பின்னர் 900 புள்ளிகளில் முடிந்தது.

இந்தியப் பங்குசந்தைகள் இன்று உற்சாகத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 1000 புள்ளிகள் வரை உயர்ந்து, பின்னர் 900 புள்ளிகளில் முடிந்தது.

இந்தியப் பங்குசந்தைகள் உயர்வுக்கும், சரிவுக்கும்  அதானி குழுமத்தின் பங்குகள் ஏற்ற இறக்க ஒரு காரணமாக இருந்து வருகிறது. இது இன்றைய வர்த்தகத்தில் தெளிவாகத் தெரிந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த GQG Partners என்ற நிறுவனம் ரூ.15,446 கோடிக்கு அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கியது. இதனால் சுணக்கமடைந்திருந்த அதானி பங்குகள் அனைத்தும் உற்சாகமாக விலைபோகின. அதானி குழுமத்தின் பங்குகள் விலை உயர்ந்து சந்தையிலும் எதிரொலித்து காலை முதல் மாலை வரை வர்த்தகம் உற்சாகமாக நடந்தது.

அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் மதிப்பு 2 நாட்களில் 30% அதிகரிப்பு

வர்த்தகத்தின் இடையே பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் 900 புள்ளிகளாகச் சரிந்தது. அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் பங்குகளை விற்று முதலீட்டை எடுத்து வந்ததை அதானி குழுமத்தின் மீதான அமெரிக்க நிறுவன முதலீடு ஈடு செய்துவிட்டது.
பங்குச்சந்தை உயர்வுக்கு 3 முக்கியக் காரணங்கள் கூறப்படுகிறது.

1.    உலகச் சந்தை முதலீ்ட்டாளர்கள் மனநிலை: அமெரிக்க பெடரல் வங்கி தலைவர் வட்டிவீத உயர்வு 25 புள்ளிகளுக்கு மேல்இருக்காது என்ற தகவல் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்து. இது ஆசியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.

2.    அதானி பங்குகள் உயர்வு: அதானி குழுமத்தின் பங்குகளை ரூ.15,446 கோடிக்கு அமெரிக்காவின் GQG Partners நிறுவனம் வாங்கியது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்து.

3.    தொழில்நுட்ப காரணிகள்

பங்குச்சந்தையில் உயர்வுக்கு காரணம் என்ன?சென்செக்ஸ்,நிப்டி புள்ளிகள் ஜோர்

காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய இந்தியச் சந்தைகள் மாலை வரை உயர்வுடன் இருந்தது. மாலை வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்து, 59,808 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 272 புள்ளிகள் அதிகரித்து, 17,594 புள்ளிகளில் முடிந்தது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் 5 நிறுவனங்களின் பங்குகள்மட்டும் சரிவில் முடிந்தன, மற்றவை லாபமடைந்தன. சன்பார்மா, ஏசியன்பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ராடெக்சிமெண்ட், டெக் மகிந்திரா பங்குகள் சரிவில் முடிந்தன

யார் இந்த ராஜீவ் ஜெயின்? அதானி-யைக் காத்த ஆபத்பாந்தவன்: ரூ.15,446 கோடி முதலீடு

நிப்டியில் அனைத்து துறைகளும் லாபத்தில் முடிந்தன. நிப்டியில் அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், அதிக லாபமடைந்தன. டெக் மகிந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட், டிவிஸ் லேப்ஸ், ஏசியன்பெயின்ட்ஸ், சிப்லா பங்குகள் சரிவில் முடிந்தன

click me!