Rajiv Jain: இந்தியத் தொழிலதிபர் கெளதம் அதானி பெரிய இக்கட்டில் இருந்தபோது, அவருக்கு ஆபத்பாந்தவராக வந்து ரூ.15,446 கோடிக்கு பங்குகளை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் வாங்கி காப்பாற்றியுள்ளது.
இந்தியத் தொழிலதிபர் கெளதம் அதானி பெரிய இக்கட்டில் இருந்தபோது, அவருக்கு ஆபத்பாந்தவராக வந்து ரூ.15,446 கோடிக்கு பங்குகளை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் வாங்கி காப்பாற்றியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜிகியூஜி பார்ட்னர்ஸ்(GQG Partners) நிறுவனத்தின் தலைவரும், தலைமை முதலீட்டு அதிகாரியுமாக இருப்பவர் ராஜீவ் ஜெயின். இவருடைய நிறுவனம்தான் அதானி குழுமத்தில் 4 நிறுவனங்களில் இருந்து ரூ.15,446 கோடிக்கு பங்குகளை வாங்கி காப்பாற்றியுள்ளது.
அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு இன்று காலை முதல் இந்தக் காரணதம்தால்தான் பங்குச்சந்தையில் உயர்ந்தது. அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு உயர்ந்ததால், மும்பை, தேசியப் பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் நடைபோட்டது.
undefined
அதானி - ஹிண்டன்பர்க் வழக்கை விசாரிக்க வல்லுநர் குழு அமைப்பு: உச்ச நீதிமன்றம்
அதானி நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் செய்த தில்லுமுல்லு குறித்து அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் கடந்தஜனவரி 24ல் அறிக்கை வெளியிட்டது. அடுத்த ஒரு மாதத்துக்குள் அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு சரசரவென வீழ்ந்தது, 30 நாட்களில் அதானி குழுமத்துக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
இந்த இக்கட்டான நிலையில்தான் ராஜீவ் ஜெயின் அதானிக்கு ஆபத்பாந்தவராக வந்து பங்குகளை வாங்கி கைதூக்கிவிட்டுள்ளார்.
யார் இந்த ராஜீவ் ஜெயின்
ராஜீவ் ஜெயின் இந்தியாவில் பிறந்து, இங்கு வளர்ந்தவர். கடந்த 1990களில்அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். மியாமி பல்கலைக்கழக்தில் எம்பிஏ பயின்ற ராஜீவ் ஜெயின், 1994ல் வோன்டோபிள் முதலீட்டு நிறுவனத்தில் தலைமை முதலீட்டு அதிகாரியாகச் சேர்ந்தார். 2002ல் ஸ்விட்சர்லாந்தின் சிஓஐ நிறுவனத்தில் தலைமை அதிகாரி அளவுக்கு ராஜீவ் ஜெயின் உயர்ந்தார். கடந்த 2012ல் ராஜீவ் ஜெயினுக்கு மார்னிங்ஸ்டார் பண்ட் மேனேஜர் விருதும்வழங்கப்பட்டது.
ஏறக்குறைய 23 ஆண்டுகால முதலீட்டு அனுபவத்தை வைத்து ராஜீவ் ஜெயின் கடந்த 2016 மார்ச் மாதம் GQG நிறுவனத்தை தொடங்கினார். பல்வேறு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி, தலைமை முதலீட்டு அதிகாரியாக இருந்ததன் அனுபவம் ராஜீவ் ஜெயினுக்கு தனது நிறுவனத்தை வழிநடத்த உதவியது.
அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் மதிப்பு 2 நாட்களில் 30% அதிகரிப்பு
தன்னுடைய சொத்தில்பெரும்பகுதியை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார் ராஜீவ் ஜெயின். 2021ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் GQG நிறுவனம் சார்பில் பொதுப்பங்கை ராஜீவ் ஜெயின் வெளியி்ட்டார். இதன் மூலம் 89.30 கோடி டாலர் கிடைத்தது.
ஜெயின் ஐபிஓ வருவாயில் 95 சதவீதத்தை நிறுவனத்தில் முதலீடு செய்வதாகவும், ஏழு வருடங்கள் பணத்தை அங்கேயே வைத்திருப்பதாகவும் உறுதியளித்தார். ராஜீவ் ஜெயின் அனுபவம், பேச்சு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல மதிப்பை ஏற்படுத்தியதால் அதிகமான பங்குகளை வாங்க முடிந்தது. ஐடிசி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, சன் பார்மா, இன்போசிஸ், பார்தி ஏர்டெல் போன்ற ஹெவி வெயிட் நிறுவனங்களில் பங்குதாரராக ராஜீவ் ஜெயின் மாறினார்.
2023ம் ஆண்டில் மார்னிங்ஸ்டார் பன்ட் மேனேஜர் விருது GQG நிறுவனத்துக்கு கிடைத்தது.
GQG நிறுவனம் உலகம் முழுவதும் 800 நிறுவனங்களில் 8800 கோடி டாலருக்கு அதிகமான பங்குகளை வைத்துள்ளது. 10 நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.