Stock Market Today: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலையில் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. அதானி பங்குகள் உயர்வுடன் நகர்கின்றன
Stock Market Today: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலையில் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. அதானி பங்குகள் உயர்வுடன் நகர்கின்றன
அமெரிக்காவில் நிலவும்பணவீக்கம், பெடரல் ரிசர்வ் வட்டி வீதத்தை உயர்த்துமா என்ற அச்சம் காரணமாக முதலீ்ட்டாளர்கள் தயக்கத்துடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த வாரத்தில் இருந்தே இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்பட்டது.
இந்த வாரத்திலும் இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. பங்குசந்தையில் நேற்றுகூட 500புள்ளிகள் சரிந்தது. ஆனால், அமெரிக்காவின் முதலீட்டு நிறுவனம் ஜிசிகியூ, அதானி குழுமத்தின் பங்குகளை 1.87 பில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாகத் தெரிவித்தது சந்தையில் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
எஸ்பிஐ வங்கி மூலம் மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம்.. இதை மட்டும் செய்தால் போதும் - முழு விபரம்
இந்தியப் பங்குச்சந்தை கடந்த வாரங்களில் சரிவுடன் இருந்தமைக்கும், அதானி குழுமத்தின் பங்குகள் சரிவு முக்கியக்காரணமாகும். இப்போது அதானி குழுமத்தின் பங்குகள் உயர்வு, சந்தையில் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்தியப் பங்குச்சந்தையில் காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 503 புள்ளிகள் உயர்ந்து, 59,412 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 154புள்ளிகள் அதிகரித்து, 17,476 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது
உயர்வுக்கு என்ன காரணம்
அமெரிக்காவைச் சேர்ந்த GQG நிறுவனம் அதானி குழுமத்தின் (AdaniGroup)பங்குகளி்ல் ரூ.15,446 கோடியை முதலீடு செய்ய இருக்கிறது. இந்த தாக்கம் பங்குச்சந்தையில் நேர்மறையாக எதிரொலித்ததால் உயர்வு காணப்படுகிறது. இந்தப் பணம் பெரும்பாலும் அதானியின் கடன்களை அடைக்கவும், அதானி குழுமம் அழுத்தத்தை சந்திக்காமல் இருக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சாதகமான செய்தி நிப்டியில் ஏற்றத்தைத் தந்துள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதால் கடும் நெருக்கடிக்கு ஆளாகிவந்த சந்தை இந்த செய்தியால் நம்பிக்கையுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் சன்ராப்ரமா, ஏசியன்பெயின்ட்ஸ்,ஐசிஐசிஐ வங்கி பங்குகளைத் தவிர மற்ற பங்குகள் ஏற்றத்தில் உள்ளன.
அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் மதிப்பு 2 நாட்களில் 30% அதிகரிப்பு
அதானி குழுமத்தில் உள்ள 10 நிறுவனங்களின் பங்குகளும் மீண்டும் ஏற்றத்தை நோக்கி உள்ளன. அதிகபட்சமாக அதானி என்டர்பிரைசர்ஸ் 8 சதவீத உயர்வுடன் உள்ளது
நிப்டியில் மருந்துத்துறையைத் தவிர அனைத்துத் துறைகளும் உயர்வில் உள்ளன. பொதுத்துறை வங்கி 3 சதவீதம், வங்கி, எரிசக்தி, கட்டுமானம், உலோகத்துறை பங்குகள் சராசரியாக 1% வளர்ச்சியில் உள்ளன.
நிப்டியில் அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், லார்சன் அன்ட் டூப்ரோ பங்குகள் லாபத்தில் உள்ளன. டாக்டர் ரெட்டீஸ் லேப்ரட்ரீஸ், சன் பார்மா, எச்டிஎப்சி லைப், ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சரிவில் உள்ளன