Gold Rate Today: 3 நாட்களுக்குப்பின் தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் என்ன?

By Pothy Raj  |  First Published Mar 3, 2023, 10:29 AM IST

தங்கம் விலை கடந்த 3 நாட்களுக்குப்பின் இன்று சற்று குறைந்துள்ளது. இந்த விலைக் குறைவு நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.


தங்கம் விலை கடந்த 3 நாட்களுக்குப்பின் இன்று சற்று குறைந்துள்ளது. இந்த விலைக் குறைவு நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 3 ரூபாயும், சவரனுக்கு 24 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,243ஆகவும், சவரன், ரூ.41,944ஆகவும் இருந்தது.

Tap to resize

Latest Videos

undefined

தங்கம் விலை அதிரடி உயர்வு | ஒரேநாளில் சவரனுக்கு ரூ.224 அதிகரிப்பு

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ரூ.5,240ஆகவும், சவரனுக்கு 24 ரூபாய் சரிந்து ரூ.41 ஆயிரத்து 920ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,240க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 42 அதிகரி்த்தது. இதனால் நகைப்பிரியர்கள், நடுத்தரக் குடும்பத்தினர் கலக்கமடைந்தனர். இந்நிலையில் 3 நாட்களுக்குப்பின் இன்று தங்கம் விலை ஆறுதலாக 3 ரூபாய் சரிந்துள்ளது.

பங்குச்சந்தையில் 8நாள் சரிவு முடிந்தது| சென்செக்ஸ் 449 புள்ளிகள் உயர்வு, நிப்டி ஏற்றம்

வெள்ளி விலை இன்று மாற்றமில்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.70.00 ஆக நீடிக்கிறது. வெள்ளி கிலோ ரூ.70,000 தொடர்கிறது
 

click me!