Share Market Today: கரடி வலையில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி: FMCG பெரும் சரிவு

By Pothy RajFirst Published Jan 20, 2023, 3:51 PM IST
Highlights

வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன

வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன.

இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து 3வது நாளாக சரிவுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன. 

அமெரிக்கப் பங்குச்சந்தை தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் சரிவுடன் முடிந்தது. அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வரலாம் என்ற கருத்தும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தும் என்றகருத்தும் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி தடுமாற்றம்: HUL பங்கு சரிவு

ஐரோப்பிய நாடுகளிலும் பங்குச்சந்தை நேற்று சரிவுடன் முடிந்தது. ஐரோப்பிய யூனியன் வங்கி தலைவர் கிறிஸ்டியன் லகார்டே, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடும்வட்டி உயர்வு தவிர்க்க இயலாதது எனத் தெரிவித்தார். 

இருப்பினும் ஜப்பான் சந்தையில் ஏற்பட்ட உயர்வு ஆசியச் சந்தையில் ஓரளவுக்கு ஏற்றத்தை அளித்தது. அது மட்டுமல்லாமல், ஏகச்சா எண்ணெய் விலை ஒரு சதவீதம் உயர்வு, சீனாவில் கச்சா எண்ணெய் தேவை அதிகரிப்பு போன்றவை சந்தையை ஏற்றத்தில் வைத்தன.

பங்குச்சந்தை மீண்டும் சரிவு: சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி! காரணம் என்ன?

ஆனாலும் இந்தியச் சந்தையில் காலை முதலே வர்த்தகம் சுணக்கமாகவே காணப்பட்டு சரிவில் இருந்தது. எப்எம்சிஜி துறையில் ஏற்பட்ட சரிவால் பிற துறைகளும் மந்தமாக இருந்தன. இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவன்தின் தாய் நிறுவனம் அதிகமான ராயல்டி தொகை கேட்டதால், எச்யுஎல் பங்குகள் 4% சரி்ந்தன.

இது சந்தையில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி மாலையில் சரிவுக்கு இட்டுச் சென்றது. மாலை வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 236 புள்ளிகள் சரிந்து, 60,621 புள்ளிகளி்ல் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 80 புள்ளிகள் குறைந்து 18,027 புள்ளிகளில் நிறைவடைந்தது.

நிப்டியி்ல் எச்யுஎல், ஏசியன்பெயின்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎப்சி லைப் இன்சூரன்ஸ், நெஸ்ட்லேஇந்தியா ஆகிய பங்குகள் அதிக இழப்பைசந்தித்தன. கோல் இந்தியா, எச்டிஎப்சி வங்கி, பவர்கிரிட் கார்ப்பரேஷன் எச்டிஎப்சி, ஐடிசி ஆகியபங்குகள் லாபமடைந்தன

click me!