Share Market Live Today: பங்குச்சந்தையில் வீழ்ச்சி: சென்செக்ஸ் 445 புள்ளிகள் சரிவு, 18,000கீழ் நிப்டி: காரணம்?

By Pothy RajFirst Published Jan 10, 2023, 9:50 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. 

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. 

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் கடந்த வாரத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. ஆனால் அதை ஈடுகட்டும் வகையில் நேற்று சென்செக்ஸ் நிப்டி அபாரமாக உயர்ந்து முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.3 லட்சம் கோடி உயர்ந்தது.

இதே நிலை இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலை முதல் பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் நகர்ந்து வருகிறது. 

பங்குச்சந்தையில் உற்சாகம்! சென்செக்ஸ் 650 புள்ளிகள், நிப்டி 18,000 புள்ளிகள் உயர்வு

சரிவுக்கு காரணம் என்ன

அமெரிக்க பெடரல் வங்கியின் வெள்ளிக்கிழமை அறிவிப்பால் சந்தையில் சாதகமான போக்கு காணப்பட்டது. ஆனால் இன்று பெடரல்ரிசர்வ் தலைவர் பாவெல், பணவீ்க்கம் குறித்த புள்ளிவிவரங்கள் குறித்தும், வட்டிவீதம் குறித்தும் பேச உள்ளார். பாவெல் பேச்சை உலக முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். 

அமெரி்க்காவில் பணவீக்கம் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் வந்தால் பெடரல் ரிசர்வ் வட்டி வீதத்தை குறைவாக உயர்த்தும், இல்லாவிட்டால் வட்டியை அதிகரிக்க முயற்சி எடுக்கும். ஆதலால்,  பெடரல் ரிசர்வ் தலைவர் அறிவிப்பை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் காத்திருப்பதால் முதலீடு செய்வதில் ஆர்வம் செலுத்தவில்லை.

2023-முதல் வாரமே பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் சொத்து ரூ.4 லட்சம் கோடி அம்போ!

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 445 புள்ளிகள் குறைந்து, 60,301 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 122 புள்ளிகள் குறைந்து, 17,978 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களில், 12 நிறுவனங்களின் பங்குகள் மட்டும் லாபத்தில் உள்ளன. மற்ற 18 நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ், பவர்கிரிட், லார்சன்அன்ட்டூப்ரோ, பஜாஜ்பின்சர்வ், டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஏர்டெல், மாருதி, சன்பார்மா ,ஆக்சிஸ் வங்கி, எச்யுஎல் ஆகிய பங்குகள் லாபத்தில் உள்ளன.

பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் குஷி! சென்செக்ஸ், நிப்டி உயர்வு! ஐடி பங்கு ஜோர்

நிப்டியில் உலோகம், மருந்துத்துறை, ரியல்எஸ்டேட், ஊடகத்துறை, ஆட்டோமொபைல் பங்குகள் லாபத்தோடு நகர்கின்றன. தகவல்தொழில்நுட்பம், எப்எம்சிஜி, பொதுத்துறை வங்கி, வங்கித்துறை பங்குகள் சரிவில் உள்ளன

டாடா மோட்டார்ஸ், ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், பவர்கிரிட், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி ஆகிய பங்குகள் நிப்டியில் லாபத்தோடு நகர்கின்றன. டிசிஎஸ், இன்போசிஸ், ஏசியன்பெயின்ட்ஸ், எச்டிஎப்சி, டெக் மகிந்திரா பங்குகள் சரிவில் உள்ளன
 

click me!