அடுத்த 7 ஆண்டுகளில் இந்தியா 7 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அடுத்த 7 ஆண்டுகளில் இந்தியா 7 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் மத்திய அரசு கூற்றுப்படிபார்த்தால், 2025ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், 2030ம் ஆண்டில் இந்தியா 7 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாறும் என நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் 35 வகையான பொருட்கள் விலை உயர வாய்ப்பு?
2022-23 நிதியாண்டின் இறுதியில் இந்தியா 3 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இருக்கும் நிலையில் அடுத்த 4 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடைய 7 ஆண்டுகள் தேவைப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
மத்திய அரசின் கூற்றுப்படி பார்த்தால் 2025ம் ஆண்டில் இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயர்ந்து, அடுத்த 2 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்ட 5 ஆண்டுகள் வரை தேவைப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.
இதில் மத்திய அரசு கூறுவதில் உண்மை இருக்கிறதா அல்லது தலைமைப் பொருளாதார ஆலோசகர் கூறுவதில் உண்மை இருக்கிறதா எனத் தெரியவில்லை.
இந்தியாவில் 1,000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க அமேசான் முடிவு?
கொல்கத்தாவில் உள்ள எம்சிசிஐ சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
2023ம்ஆண்டு காலண்டர் தொடங்கும்போதே , ரஷ்யா, உக்ரைன் போரோடுதான் தொடங்கியது. இந்த போரால், உலகளவில் புவி அ ரிசயல் மற்றும் புவிசார் பொருளாதார உறுதியற்ற நிலை உருவாகிவிட்டது.
அடுத்த முக்கிய நகர்வாக, கொரோனா காலத்துக்குப்பின் சீனா 2 ஆண்டுகளுக்குப்பின் பொருளாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இது உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் அதுசார்ந்த பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் பார்த்தால் நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின்மதிப்பு 2023 மார்ச் மாதம் முடிவில் 3 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாறும். இது அடுத்த 7 ஆண்டுகளில் அதாவது 20230ம் ஆண்டில் 7 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயரும் என எதிர்பார்க்கிறேன்.
2024ம் ஆண்டு மற்றும் 2025ம் ஆண்டில் அமெரிக்கா வட்டிவீதத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய ரூபாயில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தேசிய புள்ளியியல் அலுவலகம் கணிக்கிப்பின்படி 2022-23ஆண்டு பொருளாதார வளர்ச்சி உண்மையான அளவில் 7 சதவீதமும், பெயரளவில் 15.4ச தவீதமக இருக்கும்.
BSNL நிறுவனத்தின் 5G சேவை எப்போது கிடைக்கும்? மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடுத்தரக் காலத்தில் 6.5 சதவீதமாக இருக்கும். இது 2003-08ம் ஆண்டுகளில் 8 முதல் 9 சதவீதமாக இருந்தது.இந்த காலகட்டத்தில் உலகளவில் பொருளதாராச் செழிப்பு காணப்பட்டதால் இந்தியாவில் அந்நிய முதலீடு குவிந்தது.
சீனப் பொருளாதாரம், கமாடிட்டிபொருளாதாரம் வலுவாக வளர்ந்தது. ஆனால், இப்போது சூழல் முற்றிலும் மாறியுள்ளது, உலகளழில் பணப்புழக்கம் சுருங்கியுள்ளது, இது அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியா ஏராளமான பொருளாதார சீர்திருத்தங்கள், கட்டமைப்பு சீர்திருத்தங்களை செய்துள்ளது, அதில் முக்கியமானது ஜிஎஸ்டி, திவால் சட்டம் போன்றவையாகும். ஜன்தன் வங்கிக்கணக்கு மூலம் மக்களுக்குநேரடியாக அரசின் சலுகைகள், பலன்கள் சென்று சேர்கின்றன. டிஜிட்டல் கட்டமைப்பு வளர்ந்தது நாட்டின் ஜிடிபிக்கு 0.2 முதல் 0.5 சதவீதம் பங்களிப்பு செய்துள்ளது
இவ்வாறு நாகேஸ்வரன் தெரிவித்தார்