Union Budget 2023-24 Date:மத்திய பட்ஜெட்டில் 35 வகையான பொருட்கள் விலை உயர வாய்ப்பு?

By Pothy Raj  |  First Published Jan 9, 2023, 11:14 AM IST

2023-24ம் ஆண்டுக்கான மத்திய  பட்ஜெட்டில் 35வகையான பொருட்களின் சுங்க வரி உயர்த்தப்படலாம் என்று எக்னாக்மிக் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.


2023-24ம் ஆண்டுக்கான மத்திய  பட்ஜெட்டில் 35வகையான பொருட்களின் சுங்க வரி உயர்த்தப்படலாம் என்று எக்னாக்மிக் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியைக் குறைக்க வேண்டும், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த சுங்கவரி உயர்த்தப்பட இருப்தாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

தங்கம் விலை எகிறியது! சவரன் ரூ.42 ஆயிரமாக உயர்வு: இன்றைய நிலவரம் என்ன

இதன்படி,பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில், தனியார் ஜெட், ஹெலிகாப்டர்கள், உயர்ரக மின்னணு சாதனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நகைகள், வைட்டமின் மாத்திரைகள், மருந்துகள், கிளாஸ் பேப்பர் உள்பட 35 வகையான பொருட்களின் சுங்கவரி உயர்த்தப்படலாம்.

மத்திய நிதிஅமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில் “பல்வேறு அமைச்சகங்களிடம் இருந்து என்னென்ன பொருட்களின் இறக்குமதி சுங்கவரியை உயர்த்தலாம் எனக் கருத்துக் கேட்டுள்ளோம், அவை வந்தபின் ஆய்வு செய்யப்படும்”எனத் தெரிவித்தார்

அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும்போது, அதன் தரத்தை ஆய்வு செய்யவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இந்தியாவில் ஏற்கெனவே தயாரி்க்கப்பட்டிருந்தாலும் அவற்றின் தரமும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் 1,000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க அமேசான் முடிவு?

கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு அமைச்சகங்களுக்கு, மத்திய வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை எழுதிய கடிதத்தில் “வெளிநாடுகளி்ல் இருந்து இறக்குமதியாகும் அத்தியாவசியமில்லாத பொருட்களின் என்னென்ன, அதன்பட்டியல், வரியை எவ்வளவு உயர்த்தலாம்” என்ற விவரங்களைக் கேட்டிருந்தது. 

நாட்டின் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது மத்திய அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.  செப்டம்பர் மாதம் முடிவுவரை நடப்புக் கணக்குப்பற்றாக்குறை 4.4 சதவீதமாக உயர்ந்துவிட்டது.

இன்னும் 2 காலாண்டுகள் இருப்பதால், இது மேலும் மோசமாகலாம். நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதியும் எதிர்பாரத்த அளவுக்கு உயரவில்லை என்பதும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால்  வரும் பட்ஜெட்டில் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் 35 வகையான பொருட்களுக்கு சுங்கவரி உயர்த்தப்படலாம். 

BSNL நிறுவனத்தின் 5G சேவை எப்போது கிடைக்கும்? மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில்

ஐசிஆர்ஏ தலைமை பொருளாதார வல்லுநர் அதிதி நய்யார் கூறுகையில் “ பொருட்களின் வர்த்தப் பற்றாக்குறை மாதத்துக்கு 2500 கோடி டாலராக இருக்கிறது, இது ஜிடியில் 3.2 முதல் 3.4 சதவீதம். ஆதலால், மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில், வரும் பட்ஜெட்டில் சுங்கவரி உயர்த்தப்படலாம். 2022-23 பட்ஜெட்டிலும், குடை, ஹெட்போன்உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்குசுங்கவரி உயர்த்தப்பட்டது” எனத் தெரிவித்தார்

click me!