தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான இன்று உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. சவரனுக்கு ரூ.300க்கு மேல் உயர்ந்து, ரூ.42 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தங்கம் விலை வாரத்தின் முதல்நாளான இன்று உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. சவரனுக்கு ரூ.300க்கு மேல் உயர்ந்து, ரூ.42 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 39 ரூபாயும், சவரனுக்கு 312 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,221ஆகவும், சவரன், ரூ.41,768ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(திங்கள்கிழமை) கிராமுக்கு 39 ரூபாய் உயர்ந்து ரூ.5,260ஆகவும், சவரனுக்கு 312 ரூபாய் அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 80ஆக உயர்ந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,260க்கு விற்கப்படுகிறது.
பைசா அதிகரித்து, ரூ.74.90ஆக அதிகரித்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 ஏற்றம் கண்டு, ரூ.74,900 ஆக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை அதிரடி குறைவு! ஒரேநாளில் இவ்வளவு சரிவா! இன்றைய நிலவரம்(6/01/2023) என்ன
தங்கம் விலை புத்தாண்டு தொடக்கத்தில் இருந்து வேகமாக அதிகரித்து வருகிறது. அடுத்துவரும் பண்டிகைக்காலம், சர்வதேச சூழலில் மாற்றம் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.568 அதிகரித்துள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கமான இன்று சவரனுக்கு ரூ.312 உயர்ந்து, சவரன் ரூ.42 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அடுத்தவாரம் பொங்கல் பண்டிகை வருகிறது, பண்டிகை காலத்தில் இயல்பாகவே தங்தத்தின் விற்பனையும், விலையும் உயரும். அதற்கு ஏற்றார்போல், தொடர்ந்து அதிகரி்த்து வருகிறது.
தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு! சவரனுக்கு ரூ.250 அதிகரிப்பு: இன்றைய நிலவரம்
பண்டிகைக்காலம் முடிந்தபின் தங்கத்தின் விலை குறையவாய்ப்புள்ளது எனசந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.