Share Market Live Today: பங்குச்சந்தையில் உற்சாகம்! சென்செக்ஸ் 650 புள்ளிகள், நிப்டி 18,000 புள்ளிகள் உயர்வு

By Pothy RajFirst Published Jan 9, 2023, 9:50 AM IST
Highlights

வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ், நிப்டிபுள்ளிகள் உயர்ந்துள்ளன.

வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ், நிப்டிபுள்ளிகள் உயர்ந்துள்ளன.

கடந்த வாரத்தில் பெரும்பாலான நாட்கள் பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டு, முதல்வாரமே முதலீட்டாளர்களின் சொத்துமதிப்பு ரூ.4 லட்சம் கோடி குறைந்தது. ஆனால், இந்த வாரத்தின் தொடக்கம் அமர்க்களமாகத் தொடங்கியுள்ளது, முதலீட்டாளர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு நிலவரம் வெளியிடப்பட்டது.இதில் டிசம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதாரம் வலுவாகத் தொடங்கியுள்ளது.இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும் செய்தியாக அமைந்தது.

2023-முதல் வாரமே பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் சொத்து ரூ.4 லட்சம் கோடி அம்போ!

 டிசம்பர் மாத உயர்வு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுகுறைவு என்றாலும்,முந்தைய மாதங்களோடு ஒப்பிடுகையில் உயர்வாகும். இதைவைத்து கணிக்கையில் பெடரல் வங்கி, வட்டி வீதத்தை குறைந்த வீதத்திலேயே உயர்த்த வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் டாலர் குறியீடு 104க்கும் கீழ் குறைந்தது, 10 ஆண்டு பங்குப்பத்திர வருவாய் 12பிபியாகக் குறைந்தது. 

இதனால் ஆசியச் சந்தையும் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகத்தை நடத்தி வந்தது. சீனா தனது எல்லைகளைத் திறந்துள்ளது பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகளாகப் பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலி இந்தியப் பங்குச்சந்தையிலும் இன்று காலை எதிரொலித்ததால் ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 548 புள்ளிகள் உயர்ந்து 60,548 புள்ளிகள் உயர்ந்தும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 195 புள்ளிகள் அதிகரித்து 18,055 புள்ளிகள் அதிகரித்தும் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில், 3 நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிவில் உள்ளன, மற்ற 27 நிறுவனப் பங்குகள் லாபத்தில் உள்ளன. ஹெச்யுஎல், டைட்டன்,ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சரிவில் உள்ளன.

ரத்தக்களறியான பங்குச்சந்தை! சென்செக்ஸ் 60ஆயிரம் புள்களுக்கு கீழ்சரிவு, நிப்டி வீழ்ச்சி

நிப்டியில் அனைத்து துறைப்பங்குகளும் லாபத்தோடு நகர்கின்றன. இதில் அதிகபட்சமாக, ஐடி 2.31%, உலோகத்துறை 1.29%, மருந்துத்துறை 0.97%, பொதுத்துறை வங்கி 0.72%, ரியல்எஸ்டேட் 0.80% என ஏற்றத்துடன் நகர்கின்றன.

நிப்டியில் ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, ஜேஎஸ்டபிள்யு, டெக் மகிந்திரா, இன்டஸ்இன்ட் வங்கி பங்குகள் லாபத்தோடு நகர்கின்றன, டைட்டன் நிறுவனம், ஏசியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, எய்ச்சர் மோட்டார்ஸ் பங்கு மதிப்பு சரிந்துள்ளது.
 

click me!