இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களில் 1,000 பேரை வேலையிலிருந்து நீக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களில் 1,000 பேரை வேலையிலிருந்து நீக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
அமேசான் நிறுவனம் உலகம்முழுவதும் தனது அலுவலகங்களில் பணியாற்றுவோரில் 18ஆயிரம் பேரை வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளது. அதில் ஒருபகுதியாக இந்தியாவில் இருந்து ஆயிரம்ஊழியர்களை நீக்க முடிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்ட் ஜேசே கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “ ஜனவரி 18ம் தேதியிலிருந்து அமேசான் அலுவலகங்களில் பணியாற்றும்ஊழியர்களில் 18ஆயிரம் பேரை படிப்படியாக நீக்க இருக்கிறோம்.
BSNL நிறுவனத்தின் 5G சேவை எப்போது கிடைக்கும்? மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில்
உறுதியற்ற பொருளாதாரச்சூழல், அதிகமான ஆட்களை வேலைக்கு எடுத்ததன் காரணமாகவே இந்த ஆட்குறைப்பு நடக்கிறது. முன்பு 10ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டிருந்தோம், ஆனால், அந்த எண்ணிக்கை 18ஆயிரமாக அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்
பிடிஐ செய்திகளின்படி, “ இந்தியாவில் அமேசான் நிறுவனத்தில் மட்டும் ஒரு லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அதில் ஆயிரம் ஊழியர்களை மட்டுமே நீக்க இருக்கிறது, இது சதவீத அடிப்படையில் ஒரு சதவீத ஊழியர்கள்தான்” எனத் தெரிவித்துள்ளது.
2021, டிசம்பர் 31ம் தேதி கணக்கெடுப்பின்படி, அமேசான் இந்தியா நிறுவனத்தில் முழுநேரமாகவும், பகுதிநேரமாகவும், 16 லட்சத்து8ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
பொருளாதார மந்தநிலை, செலவுக் குறைப்பு நடவடிக்கை காரணமாக அமேசான் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவு டெலிவரி, மொத்தவிற்பனை பகிர்மானம், அமேசான் அகாடெமி ஆகியவற்றை மூடியது குறிப்பிடத்தக்கது.
கேஒய்சி அப்டேட் செய்ய வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம்: ஆர்பிஐ புதிய அறிவிப்பு
இதுதொடர்பாக அமேசான் இந்தியா நிர்வாகிகளை செய்தி நிறுவனம் சார்பில் தொடர்பு கொண்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர். ஆனாலும்அமேசான் இந்தியா நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் மளிகைப் பொருட்கள், ஸ்மார்ட்போன், நுகர்வோர்மின்னணு பொருட்கள், பேஷன், அழகுசாதனங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி முதலீடு செய்யும் எனத் தெரிவித்துள்ளது.