தங்கம் விலை 2 நாட்களாகக் குறைந்தநிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை 2 நாட்களாகக் குறைந்தநிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 31 ரூபாயும், சவரனுக்கு 248 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,190ஆகவும், சவரன், ரூ.41,520ஆகவும் இருந்தது.
தங்கம் விலை அதிரடி குறைவு! ஒரேநாளில் இவ்வளவு சரிவா! இன்றைய நிலவரம்(6/01/2023) என்ன
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்து ரூ.5,221ஆகவும், சவரனுக்கு 248 ரூபாய் அதிகரித்து ரூ.41 ஆயிரத்து 768ஆக உயர்ந்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,221க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 90 பைசா அதிகரித்து, ரூ.74.40ஆக அதிகரித்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.900 ஏற்றம் கண்டு, ரூ.74,400 ஆக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை சரிவு! இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் கிராம் ரூ.5,150 என்ற விலையில் இருந்தது, இன்று கிராம் ரூ.5,221 ஆக உயர்ந்து, கிராமுக்கு 71 ரூபாய் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.568 அதிகரித்துள்ளது. கடந்த வாரமும் இதேபோன்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இந்த வாரமும் ஏறுமுகத்தில் இருக்கிறது. இதில் அதிகபட்சமாக கடந்த 4ம் தேதி தங்கம் கிராம் ரூ.5238வரை உயர்ந்து பின்னர் சரிந்துள்ளது.
அடுத்தவாரம் பொங்கல் பண்டிகை வருவதையடுத்து, பண்டிகை காலத்தில் இயல்பாகவே தங்தத்தின் விற்பனையும், விலையும் உயரும். அதற்கு ஏற்றார்போல், தொடர்ந்து அதிகரி்த்து வருகிறது.