Share Market Today: ரத்தக்களறியான பங்குச்சந்தை! சென்செக்ஸ் 60ஆயிரம் புள்களுக்கு கீழ்சரிவு, நிப்டி வீழ்ச்சி

By Pothy RajFirst Published Jan 6, 2023, 3:58 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று பெரும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்தன. சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்டி 18ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று பெரும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்தன. சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்டி 18ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

இந்த வாரத்தில் மட்டும் இந்தியப் பங்குச்சந்தையில் நிப்டி, சென்செக்ஸ்ஆகியவற்றில்சேர்த்து  1800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

அமெரி்க்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதம் உயர்த்தப்படும் என்று பெடரல் ரிசர்வ் திட்டவட்டமாகத் தெரிவித்தது முதலீட்டாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

வங்கிக் கணக்கு KYC அப்டேட் செய்ய வேண்டுமா?: ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகள் வெளியீடு

உலகளவில் பொருளாதார மந்தநிலை மெல்ல பீடித்து வருவது, ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும்  தேவை குறைந்துவருவதும் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்தநிலையில் மீண்டும் அதிகரித்தது இந்தியா போன்ற நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும்

ஏற்றத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ்,நிப்டி உயர்வு: இன்று கவனம் ஈர்க்கும் பங்குகள்

கடந்த 9 வர்த்தக தினத்தில் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.10,676கோடி முதலீட்டை திரும்பப் பெற்றது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தக் காரணங்களால் முதலீ்ட்டாளர்கள் கலக்கமடைந்து பங்குச்சந்தையில் எச்சரிக்கையுடன் முதலீடு செய்தனர். பெரும்பாலும் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதைவிட, விற்பதிலேயே கவனம் செலுத்தினர். இதனால் காலையிலிருந்து ஊசலாட்டத்தில் இருந்த பங்குச்சந்தை பிற்பகலுக்குப்பின் சரிவை நோக்கி நகர்ந்து.

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 452 புள்ளிகள் சரிந்து, 59,900 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 132புள்ளிகள் சரிந்து, 17,859 புள்ளிகளில் நிலைபெற்றது.

2வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி: நிப்டி 18,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவு: காரணம் என்ன?

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 பங்குகளில் 5 நிறுவனப் பங்குகளைத் தவிர மற்ற 25 நிறுவனப் பங்குகளும் சரிந்தன. மகிந்திரா அன்ட் மகிந்திரா, நெஸ்ட்லே, ஐடிசி, லார்சன் அன்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் பங்குகள் லாபமீட்டின.

நிப்டியில் ரிலையன்ஸ், பிரி்ட்டானியா, மகிந்திரா அன்ட்மந்திரா பங்குகள் உச்சபட்ச லாபமடைந்தன. தகவல்தொழில்நுட்பத்துறை பங்கு 1.88 சதவீதமும், அதைத் தொடர்ந்து, வங்கித்துறை ஒரு சதவீதமும் சரிந்தன. இது தவிர மருந்துத்துறை, பொதுத்துறை வங்கி, உலோகம், கட்டுமானம், ஆட்டமொபைல் துறைப் பங்குகளும் சரிந்தன

click me!