மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சார்பில் 5ஜி சேவை எப்போது கிடைக்கும் என்பது குறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சார்பில் 5ஜி சேவை எப்போது கிடைக்கும் என்பது குறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.
ஒடிசா தலைநகர் புவனேஷவர் நகருக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வந்திருந்தார். ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் 5ஜி சேவையை தொடங்கி வைத்த அஷ்வினி வைஷ்ணவ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலை எப்போது முடியும், பயன்பாட்டுக்கு வரும்? நிதின் கட்கரி பதில்
பிஎஸ்என்எல் நிறுவனம் டிசிஎஸ் மற்றும் டிடாட் தலைமையிலான குழு, 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்க உள்ளது. இந்த சேவை நடைமுறைந்த அடுத்த ஓர் ஆண்டுக்குள் 5ஜி சேவை நடைமுறைக்கு வரும்.
ஒடிசா முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் 5ஜி சேவை கிடைக்கும். இன்று புவனேஷ்வர், கட்டாக் நகருக்கு 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது, குடியரசுதினத்துக்குமுன்பாகவே 5ஜி சேவையை வழங்க முடிவு செய்திருந்தோம் அதுபோல் செய்துவிட்டோம்.
5ஜி சேவை நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு 3 மாதங்களுக்குள் ஏராளமான நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் தொலைத்தொடர்பு சேவையை வலிமைப்படுத்த ரூ.5600 கோடியை பிரதமர் மோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
H1-B விசா கட்டணத்தை 332 சதவீதம்வரை உயர்த்துகிறது அமெரிக்கா! எவ்வளவு உயர வாய்ப்பு?
2024, ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் ஒடிசா முழுவதும் 4ஜி சேவைக்காக 5500 மொபைல் டவர்கள் 7500 கிராமங்களில் நிறுவப்படும். இதில் முதல்கட்டமாக 100 டவர்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவை 8 நகரங்களில் தொடங்கமத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் பாலாசூர், புவனேஷ்வர், பெர்ஹாம்பூர், ரூர்கேலா, சம்பல்பூர், ஜெய்பூர், அங்குல், கோராபு ஆகிய இடங்களில் வரும் டிசம்பருக்குள் தொடங்கப்படும்.
ன்னைப் பொறுத்தவரை பிஎஸ்என்எல் 5ஜி சேவை 2024 மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வந்துவிடும். மிகவும் வேகமாகப் பணிகள் நடந்து வருகின்றன. 2023ம் ஆண்டில் 4ஜி சேவையும், 2024ம் ஆண்டில் 5ஜி சேவையும் தொடங்கப்படும்
இவ்வாறு அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார்