தங்கம் விலை வாரம் முழுவதும் அதிகரித்த நிலையில், இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலைக் குறைவு நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கக்கூடியதாக அமையும் என நம்பலாம்
தங்கம் விலை வாரம் முழுவதும் அதிகரித்த நிலையில், இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த விலைக் குறைவு நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கக்கூடியதாக அமையும் என நம்பலாம்
தங்கம் விலை இன்று கிராமுக்கு 38 ரூபாயும், சவரனுக்கு 304 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,228ஆகவும், சவரன், ரூ.41,824ஆகவும் இருந்தது.
தங்கம் விலை கிடுகிடு உயர்வு! சவரனுக்கு ரூ.136 ஏற்றம்! இன்றைய(4/01/2023) நிலவரம்
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 38 ரூபாய் சரிந்து ரூ.5,190ஆகவும், சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து ரூ.41 ஆயிரத்து 520ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,190க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை இந்தவாரத் தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகத்துடன் இருந்தது. இந்த வாரத் தொடக்கத்தில் கிராம் ரூ,5,150 என இருந்து பின்னர் அதிகபட்சமாக ரூ.5,238க்கு உயர்ந்தது.
தங்கம் விலை சரிவு! இன்றைய நிலவரம் என்ன?
இதனால் நடுத்தர மக்கள் கலக்கமடைந்தனர், சவரனும் ரூ.42 ஆயிரத்தை நெருங்கியது. ஆனால், கடந்த 2 நாட்களாக தங்கம் விலை படிப்படியாக குறைந்துள்ளது.இரு நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.48, சவரனுக்கு ரூ.384 குறைந்துள்ளது மிடில் கிளாஸ் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருந்துள்ளது.
வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 50 பைசா குறைந்து, ரூ.73.50ஆகச் சரிந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.73,500 ஆக குறைந்துள்ளது.