Share Market Today: 2வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி: நிப்டி 18,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவு: காரணம் என்ன?

By Pothy RajFirst Published Jan 5, 2023, 4:18 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக இன்று சரிவோடு வர்த்தகத்தை முடித்தன. நிப்டி 18ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக இன்று சரிவோடு வர்த்தகத்தை முடித்தன. நிப்டி 18ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.

கடந்த இரு நாட்களில் மட்டும் பங்குச்சந்தையில் நிப்டி, சென்செக்ஸில் ஏறக்குறைய 1200 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. 

சரிவுக்கான காரணங்கள்

அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் நேற்று ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் வட்டிவீதம் உயர்த்தப்படலாம் என்ற அச்சத்தால்கடந்த 2 நாட்களாக உலகச் சந்தைகள் பதற்றத்துடன் இருந்தன.

பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் என்ன? ரூ.2.70 லட்சம் கோடி அம்போ! சென்செக்ஸ் நிப்டி வீழ்ச்சி

ஆனால், நேற்று நடந்த கூட்டத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமானதுதான். ஆனால், வட்டிவீதத்தை அதிகரிக்கப் போவதில்லை. குறைந்த அளவில்தான் வட்டிவீதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் இன்று நடக்கும் கடைசிக் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என்பதால் முதலீட்டாளர்கள் பதற்றத்துடனே வர்த்தகத்தில் ஈடுபட்டனர். கடந்த இரு நாட்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தநிலையில் இன்று விலை உயர்ந்தது, இருப்பினும் பேரல் 79டாலருக்கு மேல் செல்லவில்லை.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தலாம் என்ற ஊகத்தால் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீட்டை எடுத்து வருகிறார்கள். 

பங்குச்சந்தையில் கடும் ஊசலாட்டம் ! சென்செக்ஸ், நிப்டி ஏற்ற இறக்கம்: பஜாஜ் பங்கு சரிவு

இதுவரை ரூ.3461 கோடிக்கு முதலீட்டை திரும்பப்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1.20 லட்சம் கோடி முதலீட்டை திரும்ப எடுத்துள்ளனர். ஆனால், உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்கி வருகிறார்கள், இதுவரை ரூ.1,867 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.

இது தவிர ஹெவிவெயிட் பங்குகள் எனச் சொல்லப்படும் ஹெட்சிஎப்சி, இன்போசிஸ், ஆக்சிஸ் வங்கி,ஐசிஐசிஐ, விப்ரோபோன்ற பங்குகளின் சரிவும் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து 2வது நாளாகச் சரியக் காரணமாகும்.

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 304 புள்ளிகள் குறைந்து, 60,353 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 50 புள்ளிகள் குறைந்து, 17,992 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி 18 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சி அடைந்தது.

நிப்டியில் ஆட்டோமொபைல், மருந்துத்துறை, எப்எம்சிஜி துறைப் பங்குகள் ஓரளவுக்கு லாபமடைந்தன. தகவல்தொழில்நுட்ப பங்குகள் பலத்த அடிவாங்கின.

சரிவுடன் தொடங்கியது பங்குச்சந்தை: நிப்டி, சென்செக்ஸ் வீழ்ச்சி: ஜோமேட்டோவுக்கு அடி

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் 14 நிறுவனப் பங்குகள் லாபத்திலும், 16 நிறுவனப் பங்குகள் சரிவிலும் முடிந்தன. ஐடிசி, சன்பார்மா, கோடக்வங்கி, இந்துஸ்தான் லீவர், டாடாஸ்டீல், அல்ட்ராடெக், என்டிபிசி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, லார்சன்அன்ட்டூப்ரோ, டாடாமோட்டார்ஸ், ஹெச்சிஎல்டெக் ஆகிய நிறுவனப்பங்குகள் லாபமடைந்தன

click me!