Share Market Live Today: ஏற்றத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ்,நிப்டி உயர்வு: இன்று கவனம் ஈர்க்கும் பங்குகள்

By Pothy RajFirst Published Jan 6, 2023, 9:50 AM IST
Highlights

வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்தத்கத்தை தொடங்கியுள்ளன.

வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்தத்கத்தை தொடங்கியுள்ளன.

அமெரிக்கப் பங்குச்சந்தை நேற்று சரிவுடன் முடிந்தது, அதைத் தொடர்ந்து ஆசியப் பங்குச்சந்தையிலும் ஊசலாட்டம் காணப்படுவதைக் கவனித்த இந்திய முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறார்கள். 

உலகளவில் பொருளாதார மந்தநிலை மெல்ல பீடித்து வருகிறது, பல்வேறு நாடுகளில் வங்கி வட்டிவீதம் உயர்வால், தேவை குறைந்து வருவது முதலீட்டாளர்களுக்கு கவலையாக இருக்கிறது. 

கடந்த 9 வர்த்தக தினத்தில் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.10,676கோடி முதலீட்டை திரும்பப் பெற்றது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சாதகமான விஷயம் என்பது கச்சா எண்ணெய் விலை குறைந்து பேரல் 74 டாலராக இருப்பதுதான். கடந்த இரு நாட்களில் ஏற்பட்ட சரிவால் நிப்டி 18ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்துவிட்டது. 

18 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீ்க்க அமேசான் நிறுவனம் திட்டம்

ஆதலால், இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்ககள் இன்றும் எச்சரிக்கையுடனே வர்த்தகத்தை அணுகுவார்கள். காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 182 புள்ளிகள் அதிகரித்து, 60,536 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்திவருகிறது.தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 54 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 18,046 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது

இன்று கவனிக்க வேண்டிய பங்குகள்

அம்புஜா சிமென்ட்ஸ், அஸ்டர் டிஎம் ஹெல்த் கேர், கோல் இந்தியா, ஐடிபிஐ வங்கி, லார்சன் அன்ட் டூப்ரோ. இதில் கோல் இந்தியாவின் டிசம்பர் உற்பத்தி 10 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐடிபிஐ வங்கியை அரசு வங்கிப் பட்டியலில் சேர்க்க செபி அனுமதித்துள்ளது. லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் 99 சதவீத பங்குகளை திங்க் டெவலப்பர்ஸுக்கு விற்க இருக்கிறது

மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனம் மேற்கு ஆப்பிரிக்காவில் தடம் பதிக்க இருக்கிறது. ஆர்பிஎன்எல் நிறுவனம், சூரத் மெட்ரோ ரயில் பணிகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் 3ம்காலாண்டு முடிவுகள் ஜனவரி 25ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த பங்குகள் மீது முதலீட்டாளர்கள் கவனம் இருக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்

2வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி: நிப்டி 18,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவு: காரணம் என்ன?

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 பங்குகளில் 10 நிறுவனப் பங்குகளைத் தவிர மற்ற 20 நிறுவனப் பங்குகளும் லாபத்தில் உள்ளன. பிரிட்டனானியா, சன்பார்மா, என்டிசிபி, ஹெச்யுஎல், ஐடிசி, சிப்லா, பார்தி ஏர்டெல், கோடக் வங்கி உள்ளிட்டபங்குகள் லாபத்தில் உள்ளன

நிப்டியில் எப்எம்சிஜி, உலோகம், மருந்துத்துறை பங்குகள் விலை அதிகரித்துள்ளன. அதேசமயம், தகவல்தொழில்நுட்பம், பொதுத்துறை வங்கிகள், ஆட்டோமொபைல், ரியல்எஸ்டேட், நிதிச்சேவை, தனியார்வங்கிகள்உள்ளிட்டபங்குகள் சரிந்துள்ளன.

click me!