வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களின் கேஒய்சி() விவரங்களில் மாற்றங்கள் செய்யத் தேவையில்லை, ஏற்கெனவே தேவையான அனைத்து ஆவணங்களும் அளிக்கப்பட்டிருந்தால், அதை அப்டேட் செய்ய வங்கிக்கு நேரடியாகச் செல்லத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களின் கேஒய்சி() விவரங்களில் மாற்றங்கள் செய்யத் தேவையில்லை, ஏற்கெனவே தேவையான அனைத்து ஆவணங்களும் அளிக்கப்பட்டிருந்தால், அதை அப்டேட் செய்ய வங்கிக்கு நேரடியாகச் செல்லத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிக்கணக்கில் கேஒய்சி விவரங்களில் எந்த விதமான மாற்றங்களும் செய்ய வேண்டியதில்லை என்றால், மின்அஞ்சல் அல்லது பதிவு செய்த மொபைல் எண், ஏடிஎம், அல்லது ஏதேனும் டிஜிட்டல் தொடர்புகள் மூலம் வங்கிக்கு சுய விளக்கம் அளிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
BSNL நிறுவனத்தின் 5G சேவை எப்போது கிடைக்கும்? மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில்
கேஒய்சி விவரங்களை புதுப்பிக்க வாடிக்கையாளர்களை வங்கிக்கிளைக்கு நேரடியாக வரக் கூறி வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட புதிய வழிகாட்டி விதிகளில் கூறப்பட்டிருப்பதாவது:
வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர், தனது கேஒய்சி விவரத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யத் தேவையில்லை என்று விரும்பினால், அவர் சுய ஒப்புதலுடன் வங்கிக்கு மின்அஞ்சல் செய்தலே போதுமானது.
18 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீ்க்க அமேசான் நிறுவனம் திட்டம்
இதற்காக வாடிக்கையாளர்களை நேரடியாக வங்கிக்கு வங்கி நிர்வாகம் வரழைப்பதற்குப் பதிலாக மின்அஞ்சல், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண், ஏடிஎம், ஆன்லைன் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் ஆப், கடிதம் ஆகியவை மூலம் சுய ஒப்புதலைப் பெறலாம். வாடிக்கையாளர்களை நேரடியாக வங்கிக்கு அழைக்க வேண்டிய தேவையில்லை.
முகவரியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியதிருந்தால், வாடிக்கையாளர் தங்களின் சமீபத்திய முகவரி ஆவணத்தை மேற்கூறிய ஏதாவது ஒரு வழிமுறை மூலம் அனுப்பி வைக்கலாம். அதை வங்கி நிர்வாகம் அடுத்த 2 மாதங்களில் பரிசீலித்து உறுதி செய்யும்.
சட்டவிரோதப் பரிமாற்றத்தைத் தடுக்கும் வகையில் வங்கிகள் அவ்வப்போது ஆய்வுகள் செய்தும், ஆவணங்களை சரியாக வைத்திருப்பதும் அவசியமாகும்.
வங்கியில் வாடிக்கையாளர் அளித்திருக்கும் தகுதியான ஆவணங்களில் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் எண், வாக்காளர் எண் உள்ளிட்டவற்றில் ஏதேனும் இல்லாமல் இருந்தால்தான் புதிய கேஒய்சி அப்டேட்தேவைப்படுகிறது.
அதேசமயம், வாடிக்கையாளர்கள் சுய ஒப்புதல் அளித்து கடிதம் அனுப்பும்போது, அதற்கு முறையான ரசிதுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.புதிதாக கேஒய்சி செயல்முறை செய்ய வேண்டுமென்றால் வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கிக்குச் செல்லலாம் அல்லது வீடியோ மூலம் வாடிக்கையாளர் அடையாளம் காணும் முறையில் அளிக்கலாம்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது