Share Market Today: பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் குஷி! சென்செக்ஸ், நிப்டி உயர்வு! ஐடி பங்கு ஜோர்

By Pothy RajFirst Published Jan 9, 2023, 4:07 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்தன. ஐடி பங்குகள் அதிக விலைக்கு கைமாறியது, சந்தையின் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்தன. ஐடி பங்குகள் அதிக விலைக்கு கைமாறியது, சந்தையின் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.

அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு நிலவரம் வெளியிடப்பட்டது.இதில் டிசம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதாரம் வலுவாகத் தொடங்கியுள்ளது.இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும் செய்தியாக அமைந்தது.

 டிசம்பர் மாத உயர்வு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுகுறைவு என்றாலும்,முந்தைய மாதங்களோடு ஒப்பிடுகையில் உயர்வாகும். இதைவைத்து கணிக்கையில் பெடரல் வங்கி, வட்டிவீதத்தை குறைந்தவீதத்திலேயே உயர்த்த வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் டாலர் குறியீடு 104க்கும் கீழ் குறைந்தது, 10 ஆண்டு பங்குப்பத்திர வருவாய் 12பிபியாகக் குறைந்தது. 

சீனா தனது எல்லைகளைத் திறந்துள்ளது பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகளாகப் பார்க்கப்படுகிறது. இதனால் ஆசியச் சந்தையும் ஏற்றத்துடன் தொடங்கியது. இதன் எதிரொலி இந்தியப் பங்குச்சந்தையிலும் இன்று காலை எதிரொலித்ததால் ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கியது. இந்த ஏற்றம் மாலை வரை நீடித்தது. 

மாலை வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 846 புள்ளிகள் உயர்ந்து 60,747 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 241 புள்ளிகள் அதிகரித்து 18,101 புள்ளிகள் முடிந்தது. 

கடந்த வாரத்தில் நிப்டி 18ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் சென்றது, சென்செக்ஸ் 59ாயிரம் புள்ளிகளாகச் சரிந்தது, ஆனால், வாரத்தின் முதல்நாளே இழந்த புள்ளிகளை மீட்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில், மாருதி, பஜாஜ் பின்சர்வ், டைட்டன் நிறுவனங்களைத் தவிர மற்ற 27 நிறுவனப் பங்குகளும் லாபத்தில் முடிந்தன

நிப்டியில் மகிந்திரா அன்ட் மகிந்திரா, எச்சிஎல் டெக்சானலஜிஸ், டெக் மகிந்திரா, இன்டஸ்இன்ட் வங்கி ஆகிய நிறுவனப் பங்குகள் அதிக லாபமடைந்தன. டைட்டன், பஜாஜ் பின்சர்வ், கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎப்சி லைப் ஆகிய பங்குகள் சரிந்தன.

நிப்டியில் அனைத்து துறைகளும் லாபத்தில் முடிந்தன. குறிப்பாக தகவல்தொழில்நுட்பம் 2.83% உயர்ந்து முடிந்தன, அதைத்தொடர்ந்து உலோகம் 1.93%, பொதுத்துறை வங்கி 1.14%, ஆட்டோமொபைல் 1.23%உயர்ந்தன. தனியார் வங்கி, எப்எம்சிஜி, மருந்துத்துறை, ரியல்எஸ்டேட், நிதிச்சேவை, ஊடகம் அனைத்துத் துறைப் பங்குகளும் லாபத்தில் முடிந்தன


 

click me!