பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைக்கவும், சோளம்உள்ளிட்ட இறக்குமதியாகும் உணவுப் பொருட்களின் வரியைக் குறைக்கவும் மத்திய அரசு பரிசீலிக்க இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைக்கவும், சோளம்உள்ளிட்ட இறக்குமதியாகும் உணவுப் பொருட்களின் வரியைக் குறைக்கவும் மத்திய அரசு பரிசீலிக்க இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால், இது குறித்து ரிசர்வ் வங்கி, மத்திய அரசு தரப்பில் எந்தப் பதிலும் இல்லை.
பிப்ரவரி மாத சில்லறைப் பணவீக்க விவரங்கள் வெளியானபின்புதான் பெட்ரோல், டீசல் மீதான வரி்க்குறைப்பு முடிவாகும் எனத் தெரிகிறது.
ஆர்பிஐ-க்கு நெருக்கடி! ஜனவரி சில்லறை பணவீக்கம் 6.52% அதிகரிப்பு: ரெப்போ வட்டி உயரலாம்?
காரணம் என்ன
ஜனவரியில் சில்லறைப் பணவீக்கம் 6.52 சதவீதமாக அதிகரித்தது, இது டிசம்பரில் 5.72 சதவீதமாகக் குறைந்திருந்தது. ரிசர்வ் வங்கியின் பணவீக்க கட்டுப்பாட்டு அளவு என்பது 6 சதவீதம். ஆனால், கடந்த 10 மாதங்களாக பணவீக்கம் கட்டுப்பாட்டு அளவை மீறியதால், கடந்த மே மாதத்தில் இருந்து கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது.
இதற்கு ஓரளவு பலன் கிடைத்து கடந்த டிசம்பர், நவம்பர் மாதத்தில் பணவீக்கம் குறைந்தது. ஆனால், 2023, ஜனவரியில் மீண்டும் உயர்ந்துள்ளது. ஜனவரியில் பணவீக்கம் அதிகரித்தமைக்கு பருப்பு வகைகள், புரோட்டின் சத்து நிறைந்த பொருட்கள் விலை உயர்வு காரணமாகக் கூறப்படுகிறது.
பணவீக்கம்
ஜனவரியில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 5.94 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது 2022, டிசம்பரில் 4.19 சதவீதமாகக் குறைந்திருந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் 5.43 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக, 2023, ஜனவரியில் உணவுப்பொருட்களுக்கான பணவீக்கம் கடந்த ஆண்டு ஜனவரியைவிட அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் கிராமங்களில் சில்லறைப் பணவீக்கம் 6.85 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 6 சதவீதமாகவும் இருந்தது.
ஆதார்-பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 கெடு! எப்படி இணைப்பது தெரிந்து கொள்ளுங்கள்
ஆர்பிஐ இலக்கு
ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை பணவீக்கத்தை சராசரியாக 4 சதவீதமாக வைக்க வேண்டும், 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த, கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளது.
ஆனால், பணவீக்கம் கட்டுக்கடங்காமல் 8 சதவீதம் வரை சென்றதையடுத்து, கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது.
ரிசர்வ் வங்கி இதுவரை 2.50 சதவீதம் வட்டியை உயர்த்தியதால், 4 சதவீதமாக இருந்த வட்டி தற்போது 6.50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி, இறக்குமதியாகும் சோளம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீதான வரியைக் குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க இருக்கிறது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக, ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கணக்குத் தணிக்கைக்காக அமெரிக்காவின் கிராண்ட் தார்ன்டன் நிறுவனத்துடன் அதானி குழுமம் ஒப்பந்தம்
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக நிலைபெற்றுள்ளது, இந்த விலைக் குறைவின் பலனையும் மக்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை வழங்கவில்லை. கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கும்பட்சத்தில் பணவீக்கம் விரைவாக குறைய வாய்ப்புள்ளது, நுகர்வோரின் சுமையும் குறையும். ஆதலால், அடுத்த மாதத்தில் பெட்ரோல்,டீசல் வரி குறைப்பை எதிர்பார்க்கலாம்.
ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறுகையில் “பணவீக்கம் அதிகரிக்கும்போது சில பரி்ந்துரைகளை அரசுக்கு வழங்குவோம் இது வழக்கமானது. ஆனால், மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்”எ னத் தெரிவித்தனர்.