தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. விலை தொடர்ந்து சரிந்துவருவது நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. விலை தொடர்ந்து சரிந்துவருவது நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாகக் குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் விலை சரிந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,330ஆகவும், சவரன், ரூ.42,640ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து ரூ.5,315ஆகவும், சவரனுக்கு 120 ரூபாய் வீழ்ச்சி அடைந்து ரூ.42 ஆயிரத்து 520 எனச் குறைந்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,315க்கு விற்கப்படுகிறது
முதல்நாளே இன்ப அதிர்ச்சி! தங்கம் விலையால் நடுத்தரக் குடும்பங்கள் ஹேப்பி! இன்றைய நிலவரம் என்ன?
தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாகக் குறைந்துள்ளது. இருப்பினும் சவரன் விலை ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் செல்லாதது, நகைப்பிரியர்களுக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் சற்று வருத்ததம்தான். இருப்பினும், கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.200 குறைந்திருப்பது ஆறுதலாகும்
அமெரிக்காவின் ஜனவரி மாத சில்லறைப் பணவீக்க விவரங்கள் நேற்று வெளியாகின. இதில் பணவீக்கம் அளவு உயர்ந்துள்ளதால், அடுத்துவரும் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தும் என்பது உறுதியாகியுள்ளது.
இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டைக் குறைத்து பங்கு, கடன் பத்திரங்களிலும் முதலீட்டை அதிகப்படுத்தி வருவதாலும், இந்தியச் சந்தையிலிருந்து முதலீட்டை எடுத்துவருவதாலும் தங்கம் விலை சரியத் தொடங்கியுள்ளது. டாலர் மதிப்பும் வலுப்பெற்று வருகிறது.
தங்கம் விலை இன்றைய நிலவரம் என்ன? மிடில் கிளாஸ் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!
இதை நிலை தொடர்ந்து நீடித்தால், தங்கம் விலை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கலாம்.
வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.72.50 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.72.00 ஆகவும், கிலோ ரூ.72,500 ஆக இருந்தநிலையில், கிலோவுக்கு ரூ.500 சரிந்து, ரூ.72,000 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.