
இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து 2வது நாளாக ஏற்றத்துடன் முடிந்தன. காலை சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி பிற்பகுதியில் மீண்டது. சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்ந்தன
அமெரிக்காவின் ஜனவரி மாத சில்லறைப் பணவீக்கம் 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், அடுத்துவரும் நிதிக்குழுக் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் கடனுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது
அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் நிர்வாகி புதிய மனு: 17ல் விசாரணை
இதனால் சுதாரித்த முதலீட்டாளர்கள், பங்கு, கடன் பத்திரங்களில் முதலீட்டை அதிகப்படுத்தியுள்ளனர். இந்தியச் சந்தையிலிருந்தும் நேற்று முதல் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது அதிகரித்து, டாலரில் முதலீடு செய்வது உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் டாலர் மதிப்பு வலுப்பெறும், இந்திய ரூபாய் மதிப்பும் நெருக்கடிக்குள்ளாகும்.
இதனால் இன்று காலை முதல் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியது. ஆனால் பிற்பகுதியில் சந்தை மீண்டது. முதலீட்டாளர்கள் குறிப்பிட்டத் துறைப் பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கியதால் சந்தையில் உயர்வு காணப்பட்டது. இருப்பினும் சர்வதேச சூழல் காரணமாக, அடுத்துவரும் நாட்களும் சந்தையில் ஊசலாட்டமான போக்கு காணப்படும்.
ஆர்பிஐ-க்கு நெருக்கடி! ஜனவரி சில்லறை பணவீக்கம் 6.52% அதிகரிப்பு: ரெப்போ வட்டி உயரலாம்?
மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 242 புள்ளிகள் அதிகரித்து 61,275 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 86 புள்ளிகள் அதிகரித்து, 18,015 புள்ளிகளில் நிலைபெற்றது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியநிறுவனப் பங்குகளில் 20 நிறுவனப் பங்குகள் லாபத்திலும், 10 நிறுவனப் பங்குகள் சரிவிலும் உள்ளன. ஆக்சிஸ் வங்கி, பவர்கிரிட், என்டிபிசி, எச்டிஎப்சி,சன்பார்மா, லார்சன் டூப்ரோ பங்குகள் விலை குறைந்தன.
நிப்டியில் டெக் மகிந்திரா, அப்பலோ மருத்துவமனை, எய்ச்சர் மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அதானி என்டர்பிரைசர்ஸ் பங்குகள் அதிக லாபமடைந்தன. எச்யுஎல், சன்பார்மா, ஐடிசி, லார்சன்அன்ட் டூப்ரோ, ஓஎன்ஜிசி பங்குகள் விலை சரிந்தன.
நிப்டி துறைகளில் ஐடி, ஆட்டோமொபைல், கட்டுமானத்துறை தலா ஒரு சதவீதம் உயர்ந்தன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.