Share Market Live Today: ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஜோர்: கவனிக்க வேண்டிய பங்குகள்

By Pothy RajFirst Published Jan 17, 2023, 9:44 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

சர்வதேச காரணிகள் பாதகமாக இருந்தபோதிலும் இந்தியப் பங்குச்சந்தை காலை வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. அமெரிக்கப் பங்குச்சந்தை நேற்று சரிவுடன் முடிந்தது, சீனாவின் 4வது காலாண்டு பொருளாதார முடிவுகள் வெளியாவது போன்றவற்றால் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது. 

இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை திரும்பப் பெற்றுவருவது சரிவை ஏற்படுத்துகிறது, இதுவரை ரூ.18,170 கோடிக்கு முதலீட்டை அந்நிய முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். 

உலகப் பொருளாதார வளர்ச்சி குறையும்: 73 சதவீத சிஇஓ-க்கள் எதிர்பார்ப்பு

உலகப் பொருளாதார மந்தநிலை வரக்கூடும் என்று உலகப் பொருளாதார மன்றத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இது இந்தியாவுக்கு சாதகமான அம்சம் என்ற போதிலும், உலகப் பொருளாதார மந்தநிலையை கோடிட்டு காட்டுகிறது.

இருப்பினும் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதுமுதல் மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் செல்கின்றன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து, 60,395 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது, தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 81 புள்ளிகள் அதிகரித்து, 17,976 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது.

இன்று பேங்க் ஆப் இந்தியா, அதானி என்டர்பிரைசஸ், டெல்டா கார்ப்பரேஷன், ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் காப்பீடு,மெட்ரோ பிராண்ட், நியூஸ்18 குழுமம், பவர், சீமன்ஸ்,பேங்க் ஆப் பரோடா, மகிந்திரா அன்ட் மகிந்திரா உள்ளிட்ட 35 நிறுவனங்கள் இன்று 3வது காலாண்டுமுடிவுகளை அறிவிக்கின்றன. இதனால்முதலீட்டாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்தியாவின் 40% சொத்துக்களை வைத்திருக்கும் 1% பணக்காரர்கள்; அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட ஆக்ஸ்பாம்!!

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் லாபத்திலும், 16 நிறுவனப் பங்குகள் சரிவிலும் உள்ளன.

இந்துஸ்தான் யுனிலீவர், எச்சிஎல் டெக், லார்சன்அன்ட்டூப்ரோ, என்டிபிசி, ரிலையன்ஸ், பார்திஏர்டெல், விப்ரோ, இன்போசிஸ், ஏசியன்பெயின்ட்ஸ், அல்ட்ராடெக், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ் பங்குகள் லாபத்தில் உள்ளன.

நிப்டியில் எச்யுஎல், கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, எச்சிஎல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் லாபத்தில் உள்ளன, ஹின்டால்கோ, அதானி என்டர்பிரைசஸ், டைட்டன் நிறுவனம், டாடா ஸ்டீல், டாடா நுகர்வோர் பொருட்கள் ஆகியவை சரிவில் உள்ளன.

நிப்டியில் பொதுத்துறை வங்கி, தகவல்தொழில்நுட்பம், எப்எம்சிஜி ஆகிய துறைப் பங்குகள் லாபத்தில் உள்ளன, உலோகம், மருந்துத்துறை, ஆட்டோமொபைல் துறைப் பங்குகள் சரிவில் உள்ளன.


 

click me!