உலகளவில் அடுத்த 12 மாதங்களில் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிப்படையும் என்று பல்வேறு நிறுவனங்களின் 73 சதவீத தலைமை நிர்வாக அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் அடுத்த 12 மாதங்களில் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிப்படையும் என்று பல்வேறு நிறுவனங்களின் 73 சதவீத தலைமை நிர்வாக அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற அவநம்பிக்கையான கண்ணோட்டம் எந்த தொழிலதிபர்கள் மத்தியிலும் எழுந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
26வது ஆண்டு சர்வே, 105 நாடுகளி்ல் உள்ள 4,410 தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் 68 நிறுவனங்களின் சிஇஓக்களும் அடங்கும். இந்த சர்வே 2022 அக்டோபர் முதல நவம்பரில் எடுக்கப்பட்டது
உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் தேவோஸ் நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று ஆண்டு சர்வே வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டிருப்பவதாவது:
“ 2021, 2022ம் ஆண்டின் சாதகமான கண்ணோட்டத்தில் இருந்து விலகி இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது, பொருளதார வளர்ச்சி இருக்கும் என்று மூன்றில் இரு பங்கினர் கருத்துத் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு அடுத்த 12 மாதங்களில் உலகப் பொருளாதாரவளர்ச்சி குறையும் என எதிர்பார்ப்பதாக பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளில் 73 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்
ஏறக்குறைய 40 % நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், அடுத்த 10 ஆண்டுகளில் தங்கள் நிறுவனங்கள் மாற்றமடையவில்லை என்றால் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக இருக்கும் என்று நம்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
பணவீக்கம், வேலையின்மை, ஜிடிபி, உள்ளிட்ட மிகைப்பொருளாதாரக் காரணிகள் ஊசலாட்டம், புவி்அரசியல் மோதல், ஆகியவை மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. சுகாதாரம் மற்றும் சைபர் அச்சுறுத்தல் குறைந்துவிட்ட நிலையில் இவை தலைதூக்கியுள்ளன
நிறுவனங்கள் செலவினங்களைக் குறைக்க விரும்புகின்றன, ஆனால், ஊழியர்கள் ராஜினாமாக்களைத் தொடர்ந்து அவர்களைத் தக்கவைக்கும்நோக்கில், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க விரும்பவில்லை, அல்லது ஊதியத்தைக் குறைக்க விரும்பவில்லை.
அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் உள்ள தலைவர்கள், உலக வளர்ச்சியை விட உள்நாட்டு வளர்ச்சியின் மீது நம்பிக்கை குறைவுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அந்த சர்வேயில் தெரிவித்துள்ளனர்.