கடந்த டிசம்பர் 2022ல் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளது.
2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5.85 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் மேலும் குறைந்து 4.95 சதவீதத்தை எட்டியுள்ளது. 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு மொத்தவிலை பணவீக்கம் குறைந்துள்ளது.
சென்ற 2021ஆம் ஆண்டு டிசம்பரில் மொத்தவிலை பணவீக்கம் 14.27% ஆக இருந்தது. டிசம்பர் 2022ல் உணவுப் பொருட்களின் பணவீக்கம் -1.25% சதவீதமாகவும், எரிபொருள்கள் மீதான பணவீக்கம் 18.09 சதவீதமாகவும் உற்பத்திப் பொருட்களுக்கான பணவீக்கம் 3.37 சதவீதமாகவும் இருந்தது.
The annual rate of inflation based on all India Wholesale Price Index (WPI) falls to 4.95% for December 2022 against 5.85% recorded in November 2022: Ministry of Commerce & Industry pic.twitter.com/1tkXSqGf97
— ANI (@ANI)கடந்த வாரம் சில்லறை விலை பணவீக்கம் அறிவிக்கப்பட்டது. சில்லறை விலை பணவீக்கத்தை அடிப்படையாக வைத்தே மொத்தவிலை பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. சில்லறை விலை பணவீக்கம் 2 முதல் 6 சதவீதம் வரை இருக்கலாம் என்ற ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.
அக்டோபர் 2022ல் 6.77 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்க விகிதம் நவம்பரில் 5.88 சதவீதமாகவும் டிசம்பர் 5.72 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதனால், சென்ற இரண்டு மாதங்களாக சில்லறை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கி வரம்புக்குள் வந்திருக்கிறது.
பொருட்கள், சேவைகள் சில்லறை விலையில் நுகர்வோரைச் சென்றடையும் முன்பு, ஒரு மாதத்துக்கும், இன்னொரு மாதத்துக்கும் இடையே ஏற்படும் விலை மாற்றம் மொத்த விலைப் பணவீக்கம் எனப்படுகிறது. அதாவது பொருள்கள் மொத்தமாக விற்கப்படும்போது அவற்றின் விலையில் காணும் வேறுபாடு. விலையில் ஏற்படும் இந்த வேறுபாட்டைக் கொண்டு பணவீக்கம் தீர்மானிக்கப்படும்.
Explained: நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்துகள் நடப்பது ஏன்?