நாமினேஷனில் சிக்காமல் நழுவிவந்த 3 பேரை கொத்தாக தட்டிதூக்கிய ஹவுஸ்மேட்ஸ்! இந்தவார பிக்பாஸ் எவிக்‌ஷன் லிஸ்ட் இதோ

By Ganesh AFirst Published Nov 14, 2022, 9:43 AM IST
Highlights

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரை நாமினேஷனில் சிக்காமல் தப்பித்து வந்த ராபர்ட் மாஸ்டர் தற்போது முதன்முறையாக நாமினேஷன் லிஸ்டில் சிக்கி உள்ளார்.

தொகுத்து வழங்கும் சீசன் 6 நிகழ்ச்சி, தற்போது 35 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 5 பேர் வெளியேறிவிட்டதால் 16 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இதுவரை சாந்தி, அசல் கோளாறு, செரினா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஜிபி முத்து சொந்த காரணங்களுக்காக பாதியிலேயே வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி வாரந்தோறும் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் தேர்ந்தெடுக்கும் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ள போட்டியாளர்களில் மக்கள் யாருக்கு குறைவான வாக்குகள் அளிக்கிறார்களோ அதன் அடிப்படையில் இந்த வெளியேற்றுப்படலம் நடக்கும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் சிக்கி உள்ளவர்கள் பெயர்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படியுங்கள்..  டீசர் ரெடி... புஷ்பா 2 படத்தை உலகளவில் ரீச் செய்ய அல்லு அர்ஜுன் போட்ட பக்கா பிளான்

of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/K5Ni1AyPKQ

— Vijay Television (@vijaytelevision)

அதன்படி ராபர்ட் மாஸ்டர், ஜனனி, நிவாஷினி, தனலட்சுமி, அசீம், ஆயிஷா ஆகியோரது பெயர்கள் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதுவரை நாமினேஷனில் சிக்காமல் தப்பித்து வந்த ராபர்ட் மாஸ்டர் முதன்முறையாக இம்முறை அந்த பட்டியலில் சிக்கி சிக்கியுள்ளார். எந்த வேலையும் செய்யாமல் பிக்பாஸ் வீட்டில் ஜாலியாக சுற்றிவரும் ராபர்ட் மாஸ்டர் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என பலரும் யூகித்து வருகின்றனர். நெட்டிசன்களின் இந்த கணிப்பு பலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்.. ஆர்.ஆர்.ஆர் இரண்டாம் பாகம் வருமா? வராதா? - உண்மையை ஓப்பனாக போட்டுடைத்தை ராஜமவுலி

click me!