நீங்கள் வெற்றிபெற்றது செல்லாது... ஓவராக ஆட்டம்போட்ட தனலட்சுமிக்கு ஒரே அடியாக ஆப்பு வைத்த கமல்ஹாசன்

Published : Nov 13, 2022, 12:19 PM ISTUpdated : Nov 13, 2022, 12:21 PM IST
நீங்கள் வெற்றிபெற்றது செல்லாது... ஓவராக ஆட்டம்போட்ட தனலட்சுமிக்கு ஒரே அடியாக ஆப்பு வைத்த கமல்ஹாசன்

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விதிகளை மீறி டாஸ்க் விளையாடி வெற்றிபெற்ற தனலட்சுமியின் வெற்றி பறிக்கப்பட்டு விக்ரமன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க பேக்கரி டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து உருவாக்கும் ஸ்வீட்டுகள் அனைத்தும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. பொதுவாக பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் வைத்தாலே அது சண்டையில்லாமல் முடியாது.

அந்த வகையில் பேக்கரி டாஸ்கிலும் அதிகளவில் சண்டைகள் இருந்தன. குறிப்பாக கண்ணா லட்டு திண்ண ஆசையா என்கிற அணியின் தலைவராக இருந்த தனலட்சுமி, கடந்த வாரம் நடந்த பெரும்பாலான சண்டைகளுக்கு காரணமாக இருந்தார். அதுமட்டுமின்றி அவர் விதிகளை மீறி விளையாடி தான் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றார்.

இதையும் படியுங்கள்... Biggboss Tamil: தவறாக போன நெட்டிசன்கள் கணிப்பு! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா?

இந்த டாஸ்கின் இறுதியில் தனலட்சுமியின் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதோடு, அதில் தலைவராக இருந்த தனலட்சுமி அடுத்த வார நாமினேஷனில் இடம்பெற மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஓவர் குஷியில் இருந்த தனலட்சுமிக்கு தற்போது ஆப்பு வைத்து இருக்கிறார் கமல்ஹாசன்.

தனலட்சுமி பேக்கரி டாஸ்க்கில் செய்த விதிமீறல்களை குறும்படமாக போட்டு காட்டிய கமல்ஹாசன், அவர் இந்த போட்டியில் வெற்றிபெற்றது செல்லாது என அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமின்றி அடுத்த வார நாமினேஷன் ஃப்ரீ சோனில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு விக்ரமன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். கமல்ஹாசனின் இந்த டுவிஸ்டை சற்றும் எதிர்பார்க்காத தனலட்சுமி, வாயடைத்துப் போனார். இதுகுறித்த புரோமோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... வெளுத்து வாங்கிய மழை... வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் பதறிப்போய் வீடியோ வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் சேதுபதியை கலாய்த்த கானா வினோத்... காமெடி ஜட்ஜால் பிக் பாஸ் கோர்ட்டில் சிரிப்பலை..!
பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?