விக்ரமன் சொன்ன அந்த காரணத்தை கேட்டு... குழந்தை போல் கதறி அழுத ஜனனி - வைரலாகும் பிக்பாஸ் புரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள ஜனனி, விக்ரமன் சொன்ன காரணத்தை கேட்டு கதறி அழுத புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

vkraman select janany as worst performer in BiggBoss season 6 Tamil

நிகழ்ச்சியில் வாரந்தோறும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்படும், அந்த வகையில் இந்த வாரம் பேக்கரி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் போட்டியாளர்கள் கண்ணா லட்டு திண்ண ஆசையா மற்றும் அட தேனடை என்கிற பெயரில் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினர்.

இதில் பலருக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது. குறிப்பாக இந்த வாரம் நடந்த அனைத்து மோதல்களிலும் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் பெயர்கள் அதிகளவில் இருந்தன. இன்று வெளியான முதல் புரோமோவில் கூட போட்டியின் போது மணிகண்டன் தன்னை அடித்துவிட்டதாக அமுதவாணன் சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

Latest Videos

தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோவில், இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக பங்கெடுத்துக் கொள்ளாத போட்டியாளர் யார் என்பதை ஒவ்வொருவராக வந்து சொல்லுமாரு பிக்பாஸ் கேட்கிறார். இதையடுத்து எழுந்து வரும் விக்ரமன், ஜனனியின் பெயரை சொல்கிறார். அவர் ஒருவரை சார்ந்தே இருப்பது போல் தனக்கு தோன்றுவதாக விக்ரமன் கூறுகிறார்.

இதையும் படியுங்கள்... சைலண்டா இருந்து சாதிக்க நினைத்தவருக்கு ஆப்பு ரெடி... பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் தெரியுமா?

of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/es9hBd3moa

— Vijay Television (@vijaytelevision)

அப்போது விக்ரமன் ஒரு காரணத்தை சொன்னதும் இடையே எழுந்து அமுதவாணன் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். இதைப்பார்த்து கடுப்பாகும் ஜனனி, தயவு செய்து எனக்காக வாதிட வேண்டாம் என கேட்டும் தொடர்ந்து அவர்கள் இருவரும் பேசினர். இதனால் சட்டென டென்ஷன் ஆன ஜனனி, நீங்க எந்த பிரச்சனையாக இருந்தாலும் வாக்குவாதம் செய்கிறீர்கள் என அமுதவாணனை நோக்கி தலையணையை கோபத்தில் வீசி, குழந்தை போல் கதறி அழ தொடங்கினார். இதனால் ஷாக் ஆன சக ஹவுஸ்மேட்ஸ் அவரை சமாதானப்படுத்தும் காட்சிகள் இந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளன.

ஜனனி அழுததை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். அவர் கவனம் ஈர்ப்பதற்காக இதுபோன்று செய்து வருவதாகவும், அவர் அழுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது என்றும் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கலகத் தலைவன் இயக்குனர் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்த உதயநிதி.. மேடையிலேயே பதிலடி தந்த மகிழ் திருமேணி

vuukle one pixel image
click me!
vuukle one pixel image