வாய மூடுங்க...! டார்கெட் பண்ணிய அமுதவாணன்... வச்சு செய்த விக்ரமன் - வைரலாகும் புரோமோ வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேக்கரி டாஸ்க்கின் போது தன்னை டார்கெட் செய்த அமுதவாணன் மற்றும் தனலட்சுமியை விக்ரமன் வெளுத்து வாங்கும் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Amudhavanan clash with vikraman during bakery task in biggboss season 6 Tamil

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில், இந்த வாரம் பேக்கரி டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ரேம்ப்பில் வரும் பொருட்களை யார் முதலில் கைப்பற்றுகிறார்களோ அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியும். இதில் அட தேனடை மற்றும் கண்ணா லட்டு திங்க ஆசையா ஆகிய பெயரில் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

இதில் தினசரி இருவருக்கு இடையே சண்டை ஏற்பட்டு வருகிறது. முதல் நாளில் அசீம் மற்றும் மகேஸ்வரி இடையே சண்டை ஏற்பட்டது. இதையடுத்து இரண்டாம் நாளில் தனலட்சுமியும், மணிகண்டனும் முட்டிக்கொண்டனர். இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று அமுதவாணனுக்கும் விக்ரமனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Latest Videos

இதையும் படியுங்கள்...  பிக்பாஸ் கேட்ட ஏடாகூடமான கேள்வியால் ஜனனி - ஏடிகே இடையே வெடித்த சண்டை... வைரல் புரோமோ இதோ

of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/GIbwKfyEWz

— Vijay Television (@vijaytelevision)

டாஸ்க்கின் போது தன்னை பர்சனல் அட்டாக் செய்தவாக கூறி அமுதவாணனை எச்சரிக்கும் விக்ரமன், அவரை வாயை மூடிட்டு போ என்று கோபத்துடன் கூறுகிறார். பின்னர் இந்த சண்டைக்கு இடையே வரும் தனலட்சுமி, நீங்க பேசுறது மட்டும் தான் நியாயம்னு பேசாதீங்க என சொன்னதும் சண்டை மேலும் சூடுபிடிக்கிறது. இதுகுறித்த காட்சிகள் தான் தற்போது புரோமோவில் இடம்பெற்று உள்ளது.

இதையும் படியுங்கள்... கிரிக்கெட் போட்டியின் போது ஆர்.ஜே.பாலாஜியின் பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்..!

vuukle one pixel image
click me!
vuukle one pixel image