மணிகண்டன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த தனலட்சுமி... இந்த வாரமும் குறும்படம் போடுவாரா கமல்?

Published : Nov 09, 2022, 12:41 PM IST
மணிகண்டன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த தனலட்சுமி... இந்த வாரமும் குறும்படம் போடுவாரா கமல்?

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் டாஸ்கின் போது மணிகண்டன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ள தனலட்சுமி, குறும்படம் போடச்சொல்லி கேட்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாளராக தனலட்சுமி விளங்கி வருகிறார். பொதுமக்கள் அடையாளத்தோடு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள இவர், முதல் வாரம் ஜிபி முத்துவிடம் சண்டை போட்டார். பின்னர் இரண்டாவது வாரம் அசல் கோளார் தன்னை ஆண்ட்டி என சொன்னதாக கூறி அவருடன் சண்டையிட்டார்.

பின்னர் மூன்றாவது வாரம் அசீம் உடன் பொம்மை டாஸ்கின் போது சண்டை போட்டார். அப்போது குறும்படம் போட்ட கமல் தனலட்சுமியை பாராட்டினார். பின்னர் அடுத்த வாரமும் தான் செய்வது தான் சரி என நினைத்து சண்டையைத் தூண்டும் வகையில் திமிராக நடந்துகொண்ட தனலட்சுமிக்கு கொட்டு வைத்தார் கமல்.

இதையும் படியுங்கள்...  அடிக்க பாய்ந்த மணிகண்டன்... முழுசா சந்திரமுகியாக மாறிய தனலட்சுமி - அனல்பறக்கும் பிக்பாஸ் புரோமோ இதோ

இந்த வாரம் பேக்கரி டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் பிக்பாஸ் குழுவினர் ரேம்ப் வழியாக அனுப்பும் பொருளை போட்டியாளர்கள் கைப்பற்ற முயலும்போது தனலட்சுமிக்கும், மணிகண்டனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது தனலட்சுமி கத்தி கூச்சல் போட்டதால் மொத்த வீடே அலறியது.

தற்போது வெளியாகி உள்ள புரோமோவில், மணிகண்டன் தன்னை வேண்டுமென்றே தள்ளிவிட்டதாக கூறுகிறார் தனலட்சுமி, ஆனால் அவரோ தான் பாக்ஸை மட்டுமே பிடுங்கியதாக வாக்குவாதம் செய்கிறார். பின்னர் இருவரும் குறும்படம் போடச் சொல்லி கேட்கும் காட்சிகள் அந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளன. ஏற்கனவே பொம்மை டாஸ்கில் குறும்படம் போட்ட கமல், தற்போது மீண்டும் குறும்படம் போடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... முத்தம் கேட்டு டார்ச்சர் பண்ணிய ராபர்ட் மாஸ்டருக்கு தரமான பதிலடி கொடுத்த ரச்சிதா

PREV
click me!

Recommended Stories

விஜய் சேதுபதியை கலாய்த்த கானா வினோத்... காமெடி ஜட்ஜால் பிக் பாஸ் கோர்ட்டில் சிரிப்பலை..!
பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?