அடிக்க பாய்ந்த மணிகண்டன்... முழுசா சந்திரமுகியாக மாறிய தனலட்சுமி - அனல்பறக்கும் பிக்பாஸ் புரோமோ இதோ

By Ganesh AFirst Published Nov 9, 2022, 9:50 AM IST
Highlights

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஒருவருடன் சண்டையிடுவதை வழக்கமாக வைத்துள்ள தனலட்சுமி தற்போது மணிகண்டன் உடன் சண்டைபோடும் புரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக ஒரு மாதம் ஆகிவிட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அதேபோல் ஜிபி முத்துவும் சொந்த காரணங்களுக்காக பாதியிலேயே வெளியேறினார்.

தற்போது 17 போட்டியாளர்களுடன் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில், கடந்த வாரம் கொடுக்கப்பட்ட டிவி டாஸ்க் சொதப்பலாக அமைந்ததால், இந்த வாரம் டிஆர்பி-யை எகிற வைக்க புது டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார் பிக்பாஸ். அதன்படி பேக்கரி டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்...  நம்பினேன்.. நீங்க கைவிடல! இது கனவா.. நிஜமானு தெரியல - ‘லவ் டுடே’வின் வேறலெவல் ஹிட் குறித்து பிரதீப் நெகிழ்ச்சி

of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/J7otIMdec6

— Vijay Television (@vijaytelevision)

இதில் ஒரு அணிக்கு கண்ணா லட்டு திங்க ஆசையா என்றும், மற்றொரு அணிக்கு அட தேன் அடை என்றும் பெயரிட்டு இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த டாஸ்கின் போது தான் தற்போது மணிகண்டனுக்கும் தனலட்சுமிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அதில் மணிகண்டன் தள்ளிவிட்டதும், சந்திரமுகி போல் மாறிய தனலட்சுமி கத்தி கூச்சல் போடும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளது. இறுதியில் தனலட்சுமி வாடா போடா என பேசியதைக் கேட்டு கடுப்பாகும் மணிகண்டன் அவரை அடிக்க செல்வது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளதால், இன்று செம்ம சண்டை இருப்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... நானும் எவ்ளோ நாள் தான் பொறுமையா இருக்குறது... ட்ரோல் செய்தவர்களை வெளுத்துவாங்கிய ராஷ்மிகா

click me!