பலகாரம் சுட்டு விற்பனை செய்ய வேண்டும் என்கிற டாஸ்கை போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளது பிக் பாஸ் சீசன் 6.
பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆறாவது சீசனை தொட்டுள்ள இதிலும் கமலஹாசனை தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். சென்ற வாரம் அந்த டிவி இந்த டிவி என்ற டாஸ் மூலம் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி வந்தனர். விமர்சனத்தை இறுதி வார நாட்களில் பட்டாசு போல் வெடித்து இருந்தார் கமலஹாசன்.
தன்னை முன்நிறுத்திக்கொள்ள சண்டையிடும் தனலட்சுமி எப்போதும் மலையாளத்தில், ஆங்கிலத்தில் என மாற்றி மாற்றி ஷெரினா பேசியது என பல குற்றச்சாட்டுகளை கூறி செரினா வெளியே அனுப்பப்பட்டார். இதற்கிடையே தான் வெளியே செல்ல வேண்டும் என ஆயிஷா அடம் பிடித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...Samantha : ஷவர்..ஷேவ்..ஷோ அப்..கவலையை மறக்க துடிக்கும் சமந்தாவின் புதிய புகைப்படங்கள் ...
நேற்று இந்த கலாட்டாக்களுக்கு மத்தியில் கமலஹாசனின் பிறந்த நாள் கொண்டாட்டமும் நடைபெற்றது. இதையடுத்து சென்ற வாரம் பிக் பாஸ் சற்று தொய்வடைந்ததால். சூடேற்றுவதற்காக புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர். அதன்படி பலகாரம் சுட்டு விற்பனை செய்ய வேண்டும் என்கிற டாஸ்கை போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளது பிக் பாஸ் சீசன் 6.