bigg boss tamil 6 promo : சரியாக கணித்த தனலட்சுமி..கலங்கி நிற்கும் ஆயிஷா..பிக்பாஸ் ப்ரோமோ 3

Published : Nov 06, 2022, 04:30 PM ISTUpdated : Nov 06, 2022, 04:32 PM IST
bigg boss tamil 6  promo : சரியாக கணித்த தனலட்சுமி..கலங்கி நிற்கும் ஆயிஷா..பிக்பாஸ் ப்ரோமோ 3

சுருக்கம்

ஏடி.கே, மகாலட்சுமி ஷெரினாவை சுட்டிக்காட்ட,  தனலட்சுமி ஆயிஷா எனக்கூற இறுதியாக எலிமினேஷன் கார்டை கமலஹாசன் எடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

விஜய் டிவியில் அதிக ரேட்டிங்கை பெற்று வரும் இன்று எலிமினேஷனுக்கான ப்ராசஸ் நடைபெறுகிறது. 21 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக துவங்கி உள்ள இந்த சீசனில் தற்போது 18 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். சாந்தி அடுத்ததாக அசல் வெளியேற வெற்றியாளராக வருவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி பி முத்து தனது பிள்ளையை காண வேண்டும் என அடம்பிடித்து பாதியிலேயே வெளியேறி விட்டார். அவரவர்கள் அதிகமாக பேசியதை கணக்கில் காட்டி இந்த வாரம் 6 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர்.

விக்ரமன், ஆயிஷா, அசீம், ஷெரினா, கதிரவன் உள்ளிட்டோர் ஆகியுள்ளனர். அதோடு இந்த வாரம் அந்த டிவி இந்த டிவி என்னும் டாஸ்க் டாஸ்க்கும் நடத்தப்பட்டது. நேற்று போட்டியாளர்களை சந்தித்து கமலஹாசன் யாரெல்லாம் காப்பாற்றப்பட்டார்கள் என்பது குறித்து கூறியிருந்தார். இன்று யார் வெளியேற்றப்படுவார்கள் என்பது குறித்து கூற உள்ளார். 

மேலும் செய்திகளுக்கு...Yashika Aannand : எக்குத்தப்பாக கிழிந்த உடையில் மனதை மயக்கும் யாஷிகா ஆனந்த்

அதாவது விக்ரமன், அசீம், கதிரவன் உள்ளிட்டோர் அதிக ஓட்டுகளை பெற்று காப்பாற்றப்பட்டு விட்டனர். அதில் ஆயிஷா மற்றும் ஷெரினா மட்டுமே கடைசி இடங்களை பிடித்துள்ளனர். இவர்களில் யார் வெளியேற்ற உள்ளனர் என்பது குறித்து தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் காட்டப்பட்டுள்ளது. இதில்  ஏடி.கே, மகாலட்சுமி ஷெரினாவை சுட்டிக்காட்ட,  தனலட்சுமி ஆயிஷா எனக்கூற இறுதியாக எலிமினேஷன் கார்டை கமலஹாசன் எடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்... பார்வதி - கம்ருதீன் ஜோடியாக எலிமினேட் ஆகப்போறாங்களா?
விஜய் சேதுபதியை கலாய்த்த கானா வினோத்... காமெடி ஜட்ஜால் பிக் பாஸ் கோர்ட்டில் சிரிப்பலை..!