எவ்ளோ சொல்லியும் கேட்காத ஹவுஸ்மேட்ஸ்.. ரெட் கார்டு கொடுக்க முடிவெடுத்த கமல்ஹாசன் - பரபரக்கும் புரோமோ இதோ

Published : Nov 06, 2022, 12:48 PM IST
எவ்ளோ சொல்லியும் கேட்காத ஹவுஸ்மேட்ஸ்.. ரெட் கார்டு கொடுக்க முடிவெடுத்த கமல்ஹாசன் - பரபரக்கும் புரோமோ இதோ

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் தொடர்ந்து விதிகளை மீறி வருவதால் கடுப்பான கமல்ஹாசன், அவர்களுக்கு வார்னிங் கொடுக்கும் புரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் மைக்கை மறைத்துக்கொண்டு பேசுவது, சைகை காட்டி பேசுவது, வேறு மொழிகளில் பேசுவது என தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனை ஏற்கனவே பலமுறை கண்டித்தார் கமல்ஹாசன். கடந்த வாரம் கூட ஆயிஷாவும், ஷெரினாவும் மலையாளத்தில் பேசியதை சுட்டிக்காட்டி வார்னிங் கொடுத்தார்.

இருப்பினும் ஹவுஸ்மேட்ஸ் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு உள்ளனர். இந்த வாரம் கூர அமுதவாணனும், ஜனனியும் கண்ஜாடையில் பேசிக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கோபமடைந்துள்ள கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸை திட்டித்தீர்க்கும் புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. 

இதையும் படியுங்கள்... ஆறுதல் கூற செல்வதற்கே இவ்ளோ அலப்பறையா.. காரின் மேலே அமர்ந்து சென்ற பவன் கல்யாண் - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

அந்த புரோமோவில் கமல்ஹாசன் கூறியதாவது : “30 நாள் ஆகிடுச்சு. ஒரு டாஸ்க் செய்ய அழைத்தால் தாமதமாக வருகிறீர்கள். இவங்க எல்லாம் என்ன செஞ்சிடுவாங்க அப்படினு அலட்சியம் வந்துடுச்சோ. ரகசியமா பேசுவதும், எழுதி காட்டுவதும், வேறு மொழிகளில் பேசுவதும் சரியல்ல. இவ்வாறு விதிகளை தொடர்ந்து அவமதித்து நடக்கிறீர்கள். தேவைப்பட்டால் நானே ரெட் கார்டு கொடுத்து எலிமினேட் பண்ண முடியும்” என கறாராக பேசியுள்ளார் கமல்.

இதையும் படியுங்கள்... படத்தின் மொத்த பட்ஜெட்டையும் இரண்டே நாளில் தட்டித்தூக்கிய லவ் டுடே... 2-ம் நாள் வசூல் நிலவரம் இதோ

PREV
click me!

Recommended Stories

பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்... பார்வதி - கம்ருதீன் ஜோடியாக எலிமினேட் ஆகப்போறாங்களா?
விஜய் சேதுபதியை கலாய்த்த கானா வினோத்... காமெடி ஜட்ஜால் பிக் பாஸ் கோர்ட்டில் சிரிப்பலை..!