அமுதவாணன் ஜெயிலுக்கு போன கதையை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்த கமல் - வைரல் புரோமோ இதோ

Published : Nov 05, 2022, 03:39 PM IST
அமுதவாணன் ஜெயிலுக்கு போன கதையை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்த கமல் - வைரல் புரோமோ இதோ

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்று ஒளிபரப்பாக உள்ள வார இறுதி எபிசோடில் அமுதவாணன் சொன்ன கதையை கேட்டு கமல் குலுங்கி குலுங்கி சிரித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 25 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 21 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 3 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். அதில் சாந்தி மற்றும் அசல் கோளார் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினர். மறுபுறம் ஜிபி முத்து மகனின் உடல்நிலை காரணமாக பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்க் விறுவிறுப்பாக இல்லாததால் இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியே விறுவிறுப்பு இல்லாமல் செம்ம டல்லாக சென்றது. இன்று வார இறுதி என்பதால் கமல் போட்டியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அதுகுறித்த புரோமோவும் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... Biggboss Elimination: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா? எஸ்கேப்பான அசீம்..!

அப்போது அமுதவாணன் தான் சிறை சென்ற கதையை கூறினார். அதன்படி கடந்த வார டாஸ்க்கின் அடிப்படையில் கதிரவன் சிறைக்கு சென்றிருந்தார். அப்போது அமுதவாணன் பிக்பாஸிடம் கதிரவனுக்கு பதில் நான் சிறை செல்கிறேன் என சொல்லியுள்ளார். வழக்கமாக பிக்பாஸிடம் எந்த கோரிக்கை வைத்தாலும் அவர் பதிலளிக்கமாட்டார் என நினைத்து தெனாவட்டாக கேட்டுள்ளார்.

உடனடியாக உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது, நீங்கள் சிறை செல்லலாம் என சொல்லி அமுதவாணனுக்கு பல்பு கொடுத்துள்ளார் பிக்பாஸ். அவர் சொன்ன இந்தக் கதையை கேட்டு கமல் குலுங்கி குலுங்கி சிரித்த காட்சி தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளது.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்' படத்தில் இருந்து தூக்கப்பட்ட அதர்வா? என்ன காரணம்... வெளியான தகவல்..!

PREV
click me!

Recommended Stories

18 லட்சத்தோடு பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பிய பிரபலம்... அவசரப்பட்டுட்டியே தலைவா என குமுறும் ரசிகர்கள்
பாரு - கம்ருதீன் கேம் ஓவர்... ரெட் கார்டு கொடுத்த விஜய் சேதுபதி - பிக் பாஸ் ரசிகர்கள் செம ஹாப்பி..!