பெண் போட்டியாளரை செருப்பால அடிப்பேன்னு சொன்ன ராபர்ட் மாஸ்டர்... பிக்பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த சண்டை

Published : Nov 01, 2022, 09:10 PM IST
பெண் போட்டியாளரை செருப்பால அடிப்பேன்னு சொன்ன ராபர்ட் மாஸ்டர்... பிக்பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த சண்டை

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள ராபர்ட் மாஸ்டர் சக போட்டியாளரை பார்த்து செருப்பாலையே அடிப்பேன் என கூறி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு இரண்டு பேர் போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டு உள்ளனர். அதில் ஒருவர் ஷிவின் என்கிற திருநங்கை மற்றொருவர் தனலட்சுமி. இவர்கள் இருவருமே சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக தனலட்சுமி முதல் வாரத்தில் இருந்தே யாருடனாவது சண்டையிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

முதல் வாரத்தில் ஜிபி முத்து உடன் சண்டையிட்ட தனலட்சுமி, அடுத்த வாரம் அசல் கோளார் தன்னை ஆண்ட்டி என சொன்னதால் கடுப்பாகி அவரை வெளுத்து வாங்கினார். இதையடுத்து கடந்த வாரம் நடந்த நானும் பொம்மை..  நீயும் பொம்மை டாஸ்கின் போது அசீம் உடன் மோதலில் ஈடுபட்டார். இதில் அசீம் அவரை தள்ளிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்...  ஆயிஷாவுக்கு ஏற்கனவே 2 முறை கல்யாணம் ஆகிடுச்சு... பலபேர ஏமாத்திருக்கா..! முன்னாள் காதலன் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்நிலையில், இந்த வாரம் தன்லட்சுமி, ராபர்ட் மாஸ்டர் உடன் சண்டையிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டின் விதிப்படி இரவு நேரம் தவிர மற்ற நேரங்களில் யாரும் தூங்கக்கூடாது. ஆனால் தனலட்சுமி காலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்த ராபர்ட் மாஸ்டர் சாப்பிடுறா... தூங்குறா என்று தனலட்சுமியை சொல்லி உள்ளார். இதைக்கேட்ட தனலட்சுமி, வேற வேலையே இருக்காது போல என ராபர்ட்டை பார்த்து கூறுகிறார்.

இதைக்கேட்டு கடுப்பான ராபர்ட் செருப்பாலையே அடிப்பேன் உன்ன என சொல்லியுள்ளார். தூங்கினால் நாய் குளைக்கும் என்பதற்காக உன்னை எழ சொன்னேன் என ராபர்ட் சொல்லியும் கேட்காத தனலட்சுமி, நீங்க அதை சொல்லாதீங்க என எதிர்த்து பேசியுள்ள காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் இடம்பெற்று உள்ளது. இதைப்பார்க்கும் போது இந்த வாரம் தனலட்சுமியின் டார்கெட் ராபர்ட் மாஸ்டர் என்பது போல் தெரிகிறது. 

இதையும் படியுங்கள்... நயனுக்கு திருமணம் ஆனதால்.. அடுத்த லேடிசூப்பர்ஸ்டார் ஆக பிளான் போடுகிறாரா ஐஸ்வர்யா ராஜேஷ்? அவரே சொன்ன நச் பதில்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bigg Boss 10 : பிரபல கிரிக்கெட் வீரர்... ஜீ தமிழ் சீரியல் ஹீரோயின் என நீளும் பிக் பாஸ் சீசன் 10 போட்டியாளர் பட்டியல்
Bigg Boss 10 : லீக்கான பிக் பாஸ் சீசன் 10 போட்டியாளர்கள் லிஸ்ட்... இத்தனை விஜய் டிவி பிரபலங்கள் இருக்காங்களா?