பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று ஜிபி முத்து வெளியேறிய நிலையில், அவரது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
டிக்டாக் மூலம் பிரபலமானவர் . தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவருக்கு டிக்டாக்கில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு டிக்டாக் தடை செய்யப்பட்டபோது, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஜிபி முத்து விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
பின்னர் யூடியூப்பில் வீடியோ பதிவிட ஆரம்பித்த அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் குறுகிய காலத்திலேயே பாப்புலர் ஆன இவர், கடந்த ஆண்டே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அப்போது அவர் செல்லாததால், இந்த முறை கண்டிப்பாக செல்ல வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
அதனை ஏற்று நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் முதல் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்தார் ஜிபி முத்து. இவரின் வெகுளித்தனமான பேச்சும், காமெடிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், முதல் வாரத்திலேயே மக்களின் பேவரைட் போட்டியாளராக மாறினார் ஜிபி முத்து. இதனால் இந்த சீசனில் இறுதி வரை சென்று டைட்டில் வெல்வார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய ஜிபி முத்து..! அதிர்ச்சி வீடியோ..!
ஆனால் இரண்டாவது வாரம் தொடங்கியதில் இருந்தே தான் வீட்டுக்கு சென்று தனது மகனை பார்க்க வேண்டும் என்று பிக்பாஸிடம் கோரிக்கை வைத்து வந்தார். ஆனால் பிக்பாஸ் பலமுறை பேசி அவரது மனதை மாற்ற முயற்சித்தும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதியாக நேற்று கமலும் அவரிடம் அவருக்கு வெளியில் உள்ள புகழ் பற்றி எடுத்துரைத்தார்.
ஆனால் இதையெல்லாம் பெரிதுபடுத்திக் கொள்ளாத ஜிபி முத்து தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மகன் மீது அவர் வைத்திருந்த பாசத்திற்கு மதிப்பு கொடுத்து அவரை வெளியே செல்ல அனுமதித்தார் கமல்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே ஜிபி முத்து, தனது மகனுக்கு மருத்துவரீதியாக சில குறைபாடுகள் இருப்பதாக தொடர்ந்து கூறி வந்தார். இந்நிலையில், அவர் தற்போது நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில், அவரது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Last Two Weeks I Laughed and Enjoy the Moment Because of you Thalaiva❤️❤️❤️ we always Miss you Thalaiva❣️Eppavum Happy irunga Stay Strong Thalaivare❤️ Get Well Vishnu ❤️ pic.twitter.com/hLAA6UBfI4
— GP Muthu Army (@drkuttysiva)இதையும் படியுங்கள்... BiggBoss Elimination: இவங்க லிஸ்டுலையே இல்லையே? பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி யாரும் எதிர்பாராத போட்டியாளர்!