என்ன தம்பி உனக்கு ஆம்பளைங்களே புடிக்கமாட்டுது..! பெண்கள் பின்னாடியே சுற்றும் அசலை நோஸ் கட் பண்ணிய ஜிபி முத்து

By Ganesh A  |  First Published Oct 21, 2022, 12:25 PM IST

பெண்கள் பின்னாடியே சுற்றிவந்த அசலின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்த ஜிபி முத்து, அவரை பங்கமாக கலாய்த்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 


நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள , அதில் உள்ள சக பெண் போட்டியாளர்களிடம் தொடர்ந்து பல்வேறு சில்மிஷ வேலைகளை செய்து வருகிறார். முதலில் குவின்ஸியிடம் அவர் அத்துமீறி நடந்துகொண்ட விதத்தை பார்த்து நெட்டிசன்கள் கொந்தளித்தனர். அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்றெல்லாம் குரல் கொடுத்து வந்தனர்.

வெளியில் தனக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என தெரியாமல் தனது சில்மிஷ வேலைகளை தொடர்ந்து செய்து வந்தார். குவின்ஸியை தொடர்ந்து மகேஸ்வரி, மைனா நந்தினி, ஜனனி என பல பெண்களிடம் அவர் நடந்துகொண்ட விதம் முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. இதுமட்டுமின்றி நிவாஷினியை காதலிப்பதாக கூறி வருகிறார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... ஏன் வாடி... போடினு சொல்ற - திமிராக பேசிய அசீம்... திருப்பி அடித்த ஆயிஷா - அனல்பறக்கும் பிக்பாஸ் புரோமோ இதோ

இவ்வாறு தொடர்ந்து பல்வேறு வேலைகளை செய்து வந்த அசல் கோளாரு, நேற்று தனலட்சுமியை உருவகேலி செய்து வசமாக மாட்டிக் கொண்டார். இதனால் கொதித்தெழுந்த தனலட்சுமி, அசலை டார் டாராக கிழித்தார். இதைபார்த்த நெட்டிசன்கள் ‘நாங்க செய்ய நினைச்சதை நீ செஞ்சிட்டியே மா’ என தனலட்சுமியை பாராட்டினர்.

இந்நிலையில், அசலின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்த ஜிபி முத்து, அவரை பங்கமாக கலாய்த்துள்ளார். ஆண் போட்டியாளர்களாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கிருந்து அசல் எழுந்து சென்றதை பார்த்த ஜிபி முத்து, என்ன தம்பி இப்பலாம் உனக்கு ஆம்பளைங்களே புடிக்க மாட்டேங்குதுனு கேட்க, சிரித்தே மழுப்பிக் கொண்டிருந்தார் அசல். முன்பெல்லாம் அண்ணன்... அண்ணனு பாசமா வருவீங்க  ஏன் இப்படி மாறிட்டீங்க... இதுக்கு காரணம் யாரு என கேட்டு மரண கலாய் கலாய்த்துள்ளார் ஜிபி முத்து. அதுகுறித்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.

to yrn thambi ungaluku ambalaya aha pudika matunthu pic.twitter.com/WWZg178aNn

— #BiggBossTamil6 (@Biggboss_videos)

இதையும் படியுங்கள்... ‘பிரின்ஸ் vs சர்தார்’ தீபாவளி ரேஸில் வென்றது யார்?... யாருக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்தது? - வாங்க பார்க்கலாம்

click me!