பிக்பாஸ் போட்டியாளரான அசல் கோளார், தொடர்ந்து தன்னை உருவகேலி செய்து வருவதாக கூறி சக போட்டியாளரான தனலட்சுமி சண்டையிட்டுள்ளார்.
நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது 10 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கெடுத்துள்ளனர். வழக்கமாக சினிமா, மாடலிங் மற்றும் சின்னத்திரை பிரபலங்களை மட்டும் தேர்வு செய்து பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவர். ஆனால் இந்த முறை புதிய முயற்சியாக பொதுமக்களில் இருந்து இருவரை தேர்வு செய்து உள்ளே போட்டியாளர்களாக அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த வகையில், பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றது மற்றும் ஷிவின். இதில் தனலட்சுமி முதல் வாரமே ஜிபி முத்து உடன் சண்டையிட்டு சர்ச்சையில் சிக்கினார். அவரை முதல் ஆளாக வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பேசி வந்த நெட்டிசன்கள், தற்போது அவருக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதற்கு காரணம் நேற்று நள்ளிரவில் நடந்த சண்டை தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அங்குள்ள பெண்களிடம் சில்மிஷ வேலைகளை செய்து கடந்த சில நாட்களாகவே ட்ரோல் செய்யப்பட்டு வந்த அசல் கோளாரு தான் இந்த சண்டைக்கு காரணம். தனலட்சுமி அவரை அண்ணா என தொடர்ந்து கூப்பிட்டதை அடுத்து, ‘நீ எனக்கு பெரியம்மா மாதிரி இருக்க... நீ ஏன் என்ன அண்ணானு கூப்பிடுற’ என கேட்டார்.
இதையும் படியுங்கள்... அதிர்ச்சி.. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு திடீர் என வெளியேறுகிறாரா ஆயிஷா..?
அசலின் பேச்சைக் கேட்டு டென்ஷன் ஆன தனலட்சுமி, ‘நீ ஏன் என்ன தொடர்ந்து உருவகேலி செய்யுற’ என கேள்வி கேட்க. பதிலுக்கு அசல், ‘நீ ஒன்னும் இல்லாதப்பவே இப்படி எகிறுகிறாய்.. உன்னெல்லாம் அப்பவே பஸ்ஸர் அமுக்கி வெளிய அனுப்பிருக்கனும்’ என சொல்கிறார். இதனால் மேலும் கோபமடைந்த தனலட்சுமி, அசலிடம் நேருக்கு நேர் சண்டைக்கு நின்றதால் பிக்பாஸ் வீடே அதிர்ந்து போனது.
பின்னர் சக போட்டியாளர்கள் வந்து சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் கோபம் தீராத தனலட்சுமி, ‘என்ன ஆண்ட்டினும், பெரிம்மானும் கூப்பிடுறதுக்கு நீ யாரு, நீ தான் எனக்கு சோறு போடுறியா என தொடர்ந்து சண்டையிட்டார். இதையடுத்து சண்டை பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக தனலட்சுமியை வெளியே அழைத்து சென்றார் அசீம். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே அசல் கோளார் தொடர்ந்து பெண்களின் கையை தடவுவது, காலை பிடிப்பது என அத்துமீறி நடந்துகொண்டதால் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என குரல் கொடுத்து வந்த நெட்டிசன்கள், தனலட்சுமி, அசலை டார் டாராக கிழித்ததை பார்த்ததும் சிங்கப்பெண் நீ தான் மா என்றெல்லாம் அவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஏதாவது செய்... பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற கெஞ்சுகிறாரா ஜி.பி.முத்து! வெளியான அதிர்ச்சி தகவல்!