நேத்து குவின்ஸி.. இன்னைக்கு மகேஸ்வரி - பெண்களிடம் தொடர்ந்து அத்துமீறும் அசல்! ரெட் கார்டு கொடுப்பாரா பிக்பாஸ்?

Published : Oct 18, 2022, 12:38 PM IST
நேத்து குவின்ஸி.. இன்னைக்கு மகேஸ்வரி - பெண்களிடம் தொடர்ந்து அத்துமீறும் அசல்! ரெட் கார்டு கொடுப்பாரா பிக்பாஸ்?

சுருக்கம்

பிக்பாஸ் போட்டியாளரான அசல் கோளார் நேற்று குவின்ஸியிடம் அத்துமீறி நடந்து கொண்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இன்று மீண்டும் அதேபோல் ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார் அசல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 5 சீசன்களைப் போல் அல்லாது இந்த சீசன் முழுவதும் 24 மணிநேரமும் ஒளிபரப்பு செய்து வருகின்றனர். இதனால் ஹவுஸ்மேட்ஸ் என்ன செய்கிறார்கள் என்பதை ரசிகர்களும் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டு உள்ளனர்.

அதில் ஜிபி முத்து தான் மக்களின் பேவரைட்டாக உள்ளார். சக போட்டியாளர்களுக்கும் அவரை தான் மிகவும் பிடித்திருக்கிறது. இவர் தவிர வெளியில் தெரிவது ஒன்றிரண்டு போட்டியாளர்கள் தான். மற்றபடி நிவாஷினி, ஷெரினா, ராம், ராபர்ட் ஆகியோர் இந்த வீட்டில் தான் இருக்கிறார்களா என கேட்கும் அளவுக்கு மிகவும் சைலண்டாக இருந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... குவின்ஸியிடம் சில்மிஷம் செய்த அசல் கோளார்... வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - ஆக்‌ஷன் எடுப்பாரா பிக்பாஸ்?

இந்த சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளர் என்றால் அது அசல் கோளாரு தான். நேற்று அவர் சக போட்டியாளரான குவின்ஸியிடம் அத்துமீறி நடந்துகொண்டதை பார்த்து நெட்டிசன்கள் கொந்தளித்தனர். அதுமட்டுமின்றி நிவாஷினி மற்றும் ஆயிஷா ஆகியோரிடம் அசல் தவறாக நடந்து கொள்வதாக போட்டோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அசல் கோளார் இன்றும் தனது சேட்டையை தொடர்ந்துள்ளார். நேற்று குவின்ஸியிடம் நடந்துகொண்டதைப் போல் இன்று விஜே மகேஸ்வரியிடம் அவர் அத்துமீறி நடந்துகொண்டதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு உடனடியாக ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்புமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்...  அய்யய்யோ இந்த டாஸ்க்கா... அப்போ இந்த வாரம் பிக்பாஸ் வீடே கண்ணீர் கடல்ல மிதக்கப்போகுது..! புரோமோ இதோ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் டைட்டிலை தட்டிதூக்கிய திவ்யா கணேஷ்... டிராபியோடு அவர் அள்ளிச் சென்ற பரிசுகள் என்னென்ன?
பிக் பாஸ் பைனலிஸ்டுகளுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதிலும் திவ்யா தான் டாப்பு..!