என்ன இந்த குத்து குத்துறாரு... விக்ரமனின் டான்ஸை பார்த்து வாயடைத்து போன ஹவுஸ்மேட்ஸ் - வைரல் வீடியோ இதோ

Published : Oct 19, 2022, 03:32 PM ISTUpdated : Oct 29, 2022, 02:20 AM IST
என்ன இந்த குத்து குத்துறாரு... விக்ரமனின் டான்ஸை பார்த்து வாயடைத்து போன ஹவுஸ்மேட்ஸ் - வைரல் வீடியோ இதோ

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு டான்ஸ் ஆடவே தெரியாது என சொல்லி வந்த விக்ரமன் செம்ம மாஸாக ஆடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது நடந்து வருகிறது. 10 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் 11 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 21 பேர் பங்கேற்று உள்ளனர். வழக்கம்போல் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரந்தோறும் டாஸ்க் கொடுக்கப்படும். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் டான்ஸ் டாஸ்கில் போட்டியாளர்கள் இருவர் ஜோடியாக நடனம் ஆட வேண்டும். இதில் சிறப்பாக நடனமாடுபவர் யார் என்பதை சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்து ஓட்டு போடுவார்கள். அதன்படி விக்ரமனும், கதிரவனும் ஜோடியாக நடனமாடி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் வசூல் எத்தனை கோடி? அதிகார பூர்வமாக அறிவித்த லைகா நிறுவனம்!

தனக்கு நடனமாடவே தெரியாது என சொல்லி வந்த விக்ரமன். தனுஷின் மாரி பட பாடலை கேட்டதும் தர லோக்கலாக இறங்கி குத்தாட்டம் போட்டுள்ளார். இதைப்பார்த்த சக ஹவுஸ்மேட்ஸ் என்னடா இது இந்த மனுஷன் இப்படி டான்ஸ் ஆடுறாறே என வாயடைத்துப் போய் பார்த்தனர். அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

அவர் நடனமாடி முடித்ததும் அனைவரும் அவரை கட்டிப்பிடித்து பாராட்டினர். குறிப்பாக அந்த வீட்டில் உள்ள டான்ஸ் மாஸ்டர்களான சாந்தியும், ராபர்ட்டும் விக்ரமனின் நடனத்தை மிகவும் என்ஜாய் செய்து பார்த்தனர். அதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளது.

இதையும் படியுங்கள்... அதிகளவிலான தியேட்டர்களை தட்டித்தூக்கிய சர்தார்... தீபாவளி ரேஸில் பின்னுக்கு தள்ளப்பட்ட பிரின்ஸ் - காரணம் என்ன?

PREV
click me!

Recommended Stories

நீலாம்பரி போல் திமிர் காட்டிய சாண்ட்ரா... படையப்பாவாக மாறி பதிலடி கொடுத்த கானா வினோத்..!
முதன்முறையாக வீட்டு தலை ஆன கானா வினோத்... இந்த வார பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கியது யார்... யார் தெரியுமா?