என் பொண்ணா இருந்தா செருப்பாலயே அடிப்பேன்! வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஜிபி முத்து.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Published : Oct 20, 2022, 09:00 AM IST
என் பொண்ணா இருந்தா செருப்பாலயே அடிப்பேன்! வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஜிபி முத்து.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சுருக்கம்

பிக்பாஸ் போட்டியாளரான ஜிபி முத்து, ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக பேசியது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுள்ள போட்டியாளர்களில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் என்றால் அது ஜிபி முத்து தான். நாளுக்கு நாள் இவருக்கான சப்போர்ட் பெருகி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற சம்பவத்துக்கு பின் நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார் ஜிபி முத்து.

நேற்று நள்ளிரவு அசல் கோளார் மற்றும் தனலட்சுமி இடையே சண்டை நடைபெற்றது. அசல் தன்னை உருவகேலி செய்ததை தைரியமாக எதிர்த்து நின்று தட்டிக்கேட்டார் தனலட்சுமி. இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர அசீம், தனலட்சுமியை வீட்டுக்கு வெளியே அழைத்து சென்றார். அப்போது அங்கு வந்த விக்ரமன் தனலட்சுமியிடம் என்ன பிரச்சனை.. ஏன் அழுகுற என கேட்டார். ஆனால் அசீம், தனலட்சுமியை விக்ரமனுடன் பேசவிடாமல் வெளியே அழைத்து சென்றார்.

இதனால் விக்ரமன் கோபமடைந்து அசீம் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இடையே வந்த ஜிபி முத்து, நீங்க அதைப்பற்றி பேசக்கூடாது என சொல்லி விக்ரமனை சமாதானப்படுத்த முயன்றார். தன்னை பேச விடாமல் தடுத்த ஜிபி முத்துவிடம் கடிந்துகொண்ட விக்ரமன், ‘நீங்க என் ஊர்காரர் என்பதால் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன். என்ன நீங்க தடுக்காதீங்க. நான் பேசுவதற்கு கூட இந்த வீட்டில் உரிமை இல்லையா ’ என கேட்டார்.

இதையும் படியுங்கள்... ஆண்ட்டினு சொன்ன அசல் கோளார்.... டார் டாராக கிழித்த தனலட்சுமி..! பிக்பாஸ் வீட்டில் நடந்த மிகப்பெரிய சண்டை

இதன்பின் பேசிய ஜிபி முத்து, பிரச்சனை பெரிதாகி விடக்கூடாது என்பதால் உங்களை தடுத்தேன் எனக்கூறி, தனலட்சுமி அசலிடம் எகிறியது தவறு என பேசினார். ஒரு பொம்பள புள்ள எகிறினால் ஆணுக்கு கோபம் வரத்தான் செய்யும் என்றும், பொண்ணுங்க ஆண்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜிபி முத்து பேசியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

அந்த சமயத்தில் கடந்த வாரம் தனலட்சுமிக்கும், தனக்கும் இடையே நடந்த சண்டையை பற்றியும் பேசிய ஜிபி முத்து, தான் மன்னிப்பு கேட்டும் தனலட்சுமி தன்னை மன்னிக்கவில்லை என்று கூறினார். இதுவே எனது மகளாக இருந்திருந்தால் செருப்பாலயே அடிச்சிருப்பேன் என சொன்ன ஜிபி முத்துவிடம் இதெல்லாம் தப்பு, உங்க பொண்ணா இருந்தாலும் செருப்பால அடிக்கக்கூடாது என கூற, இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் இல்லாத ஜிபி முத்து தொடர்ந்து ஆணாதிக்க தொனியிலேயே பேசினார்.

அவரின் இந்த பேச்சு தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பெண்களை உரசுவதற்காகவே பஸ்ஸில் செல்வேன் என சொன்னதற்காக சரவணனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது போல் ஜிபி முத்துவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Biggboss Tamil: தனலட்சுமி சொன்னதை கேட்டு கண்ணீர் விட்ட ஜிபி முத்து.! நீ அழுவாத தலைவா.. மனதை தேற்றிய ரசிகர்கள்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bigg Boss 10 : பிரபல கிரிக்கெட் வீரர்... ஜீ தமிழ் சீரியல் ஹீரோயின் என நீளும் பிக் பாஸ் சீசன் 10 போட்டியாளர் பட்டியல்
Bigg Boss 10 : லீக்கான பிக் பாஸ் சீசன் 10 போட்டியாளர்கள் லிஸ்ட்... இத்தனை விஜய் டிவி பிரபலங்கள் இருக்காங்களா?