MLA-வோட மருமகன் நான்... அதுனால தான் விக்ரமன் என்கிட்ட பேசமாட்றான் - அசீமின் பேச்சால் வெடித்த சர்ச்சை

Published : Oct 21, 2022, 02:02 PM IST
MLA-வோட மருமகன் நான்... அதுனால தான் விக்ரமன் என்கிட்ட பேசமாட்றான் - அசீமின் பேச்சால் வெடித்த சர்ச்சை

சுருக்கம்

விக்ரமன் தன்னிடம் பேச தயங்குவதற்கான காரணம் குறித்து ஹவுஸ்மேட்ஸிடம் பேசிய அசீம், தான் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் அசீம். இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். திருமணமாகி விவாகரத்து பெற்ற அசீமுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. அவனுக்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே கலந்துகொண்டதாக ஆரம்பத்தில் நெகிழ்ச்சியாக பேசி இருந்தார் அசீம்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்தே நிறைய கிரிஞ்சான விஷயங்களை செய்து வருகிறார் அசீம். அவர் கெத்து என நினைத்து செய்யும் ஒவ்வொரு விஷயமும், நம் நெட்டிசன்களுக்கு ட்ரோல் மெட்டீரியலாக மாறி விடுகின்றன. குறிப்பாக இந்த சீசனில் அதிகம் ட்ரோல் செய்யப்படுபவரும் அவர்தான்.

இப்படி இருக்கையில், விக்ரமன் தன்னிடம் பேச தயங்குவதற்கான காரணம் குறித்து ஹவுஸ்மேட்ஸிடம் பேசிய அசீம், தான் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்த காட்சிகளெல்லாம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படாவிட்டாலும், லைவ் ஸ்டிரீமிங்கில் ஒளிபரப்பாகி உள்ளன. அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்...  வெள்ள சட்ட போட்டா அரசியல்வாதியா... டேய் போடா - தரக்குறைவாக பேசிய அசீம்... அடிக்க பாய்ந்த விக்ரமன் - வீடியோ இதோ

அவர் பேசியதாவது : “என் அம்மாவோட தம்பி ஒரு MLA. அந்த கட்சில விக்ரமன் ஒரு உறுப்பினர். அவன் இருக்க கட்சில என் மாமா தான் துணைப் பொதுச்செயலாளர். அதனால தான் அவன் என்கிட்ட பேசமாட்றான்” என கூறியுள்ளார். விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரான ஆளூர் ஷானவாஸ் தான் அசீமின் மாமா என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. 

அதேபோல் விக்ரமன் நடித்த சீரியல் 40 எபிசோடுகளுடன் முடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அவன் ஒரு சீரியல் ஆர்டிஸ்ட் எனவும் அந்த வீடியோவில் அசீம் பேசி உள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், உங்க மாமா MLA என்றால் விக்ரமன் உனக்கு கொத்தடிமையாக இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி வருவதோடு அசீமை திட்டியும் பதிவிட்டு வருகின்றனர். இன்றைய எபிசோடில் அசீமுக்கும் விக்ரமனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதால், அப்போது என்னவெல்லாம் பேசி இருக்கிறார்களோ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படியுங்கள்... என்ன தம்பி உனக்கு ஆம்பளைங்களே புடிக்கமாட்டுது..! பெண்கள் பின்னாடியே சுற்றும் அசலை நோஸ் கட் பண்ணிய ஜிபி முத்து

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதன்முறையாக வீட்டு தலை ஆன கானா வினோத்... இந்த வார பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கியது யார்... யார் தெரியுமா?
பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்... பார்வதி - கம்ருதீன் ஜோடியாக எலிமினேட் ஆகப்போறாங்களா?