புரமோஷனுக்காக மட்டும் ரூ.2.5 லட்சம் கொடுத்திருக்கேன்... பிக்பாஸ் பிரபலம் சொன்ன பகீர் தகவலால் ஷாக்கான ரசிகர்கள்

By Ganesh A  |  First Published Oct 30, 2022, 11:23 AM IST

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போடியாளர் ஒருவர் தான் புரமோஷனுக்காக மட்டும் ரூ.2.5 லட்சம் செலவழித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.


நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 19 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மறுபுறம் பாதியிலேயே வெளியேறினார். அதேபோல் இந்த வாரம் அசல் கோளார் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனதற்கு காரணம் நடிகை ஓவியா தான். முதல் சீசனில் அவர் கலந்துகொண்டபோது முன்னணி நடிகர், நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு ஓவியாவுக்கு ரசிகர் பட்டாளம் உருவானது. அந்நிகழ்ச்சியின் போது அவருக்கு டுவிட்டரில் ஆர்மியெல்லாம் தொடங்கி ரசிகர்கள் அதகளப்படுத்தினர்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... துணிவு மட்டுமில்ல வாரிசு படத்தையும் உதயநிதி தான் வெளியிட போகிறாராம்... இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு..!

அந்த சீசனுக்கு பின்னர் அடுத்தடுத்த சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருக்குமே ஆர்மி உருவாக்கினர். ஆனால் ஓவியாவுக்கு கிடைத்த அளவுக்கு அதன் மூலம் யாருக்கும் பாப்புலாரிட்டி கிடைக்கவில்லை. இதற்கு காரணம் போட்டியாளர்கள் பணம் கொடுத்து தங்களைப் பற்றி புரமோஷன் செய்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.

இதுபற்றி எவரும் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள ராம், தான் புரமோஷனுக்காக ரூ.2.5 லட்சம் செலவழித்துள்ளதாக சக போட்டியாளர்களிடம் தெரிவித்துள்ளது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குவின்ஸி உடனான அந்த உரையாடலின் போது இதனை தெரிவித்த அவர், ஏற்கனவே நிறைய பேருக்கு புரமோஷன் செய்தவர்களிடம் தான் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதைவைத்து பார்க்கும்போது முந்தைய சீசன் போட்டியாளர்களும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

" nan inga panrathu veliyee promote pannanuma"
Aama . Ram .. nenga veetla ❤️ track thavira vera enna pandringa 🤣🤣

pic.twitter.com/k6TPgoEa16

— குருநாதா👁️ (@gurunathaa4)

இதையும் படியுங்கள்... நேத்து ஷெரினா... இன்னைக்கு ஆயிஷாவா..! கேப் விடாமல் வச்சு செய்யும் கமல்ஹாசன் - மாஸ் புரோமோ இதோ

click me!