கமல்ஹாசன் முன்னாடியேவா... ரச்சிதாவுக்கு நூல்விட்டு மாட்டிக்கொண்ட ராபர்ட் மாஸ்டர் - கலகலப்பான புரோமோ இதோ

Published : Nov 06, 2022, 10:02 AM ISTUpdated : Nov 09, 2022, 10:06 AM IST
கமல்ஹாசன் முன்னாடியேவா... ரச்சிதாவுக்கு நூல்விட்டு மாட்டிக்கொண்ட ராபர்ட் மாஸ்டர் - கலகலப்பான புரோமோ இதோ

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் முன்னிலையில் நடிகை ரச்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்கும் புரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியிடம் நீங்கள் தான் என்னுடைய கிரஷ் என சொல்லி முதல் நாளில் இருந்தே பின்னாடியே சுற்றி வருகிறார் ராபர்ட் மாஸ்டர். இருவருமே விவாகரத்து பெற்றவர்கள் என்பதால் இவர்களுக்குள் காதல் மலர்ந்துவிடுமோ என கேட்கும் அளவுக்கு சமீப காலமாக இவர்களது நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

ராபர்ட் தொடர்ந்து தனது காதலை வெளிப்படுத்த முயற்சித்து வருகிறார். மறுபுறம் ரச்சிதா இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில், இன்று போட்டியாளர்களிடம் கமல் ஒரு டாஸ்க்கை கொடுத்துள்ளார். அதில் ஒரு நிருபர் பிரபலத்தை நேர்காணல் செய்வது போல் அந்த டாஸ்க் நடத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அமுதவாணன் ஜெயிலுக்கு போன கதையை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்த கமல் - வைரல் புரோமோ இதோ

அப்போது ரச்சிதா பிரபலமாகவும், ராபர்ட் நிருபராகவும் வந்து அந்த டாஸ்க்கில் கலந்துகொள்கின்றனர். அப்போது ரச்சிதாவிடம், அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்கிறார் ராபர்ட். முதலில் ராபர்ட் மாஸ்டர் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றும் அவர் எதாவது உங்களிடம் சொல்ல வருவது போல் தெரிகிறதா எனவும் கேட்கிறார். 

டாஸ்க்கை வைத்து ரச்சிதாவுக்கு ராபர்ட் நூல்விடுவதை அறிந்ததும் கமல் பஸ்சர் அமுக்கி அந்த டாஸ்க்கை முடிவுக்கு கொண்டு வருகிறார். இதுகுறித்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளது.

இதையும் படியுங்கள்...  கமலிடம் வசமாக சிக்கிய தனலட்சுமி..! நிக்க வைத்து வெளுத்து விட்ட செம்ம சம்பவம்.. வெளியான புரோமோ..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்... பார்வதி - கம்ருதீன் ஜோடியாக எலிமினேட் ஆகப்போறாங்களா?
விஜய் சேதுபதியை கலாய்த்த கானா வினோத்... காமெடி ஜட்ஜால் பிக் பாஸ் கோர்ட்டில் சிரிப்பலை..!